நிமாபென் ஆச்சார்யா
நிமாபென் ஆச்சார்யா Nimaben Acharya | |
---|---|
குசராத்து சட்டப் பேரவையின் அவைத்தலைவர் | |
பதவியில் 27 செப்டம்பர் 2021 – 8 திசம்பர் 2022 | |
முன்னையவர் | இராசேந்திர திரிவேதி |
சட்டமன்ற உறுப்பினர், குசராத்து சட்டப் பேரவை | |
பதவியில் 2012–2022 | |
தொகுதி | புச்சு |
பதவியில் 2002–2012 | |
தொகுதி | அஞ்சார் சட்டமன்றத் தொகுதி |
பதவியில் 1995–1998 | |
தொகுதி | அப்தாசா சட்டமன்றத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | சுரேந்திரநகர் |
தேசியம் | இந்தியாஇந்தியர் |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
துணைவர் | பாவேசுபாய் எஃப். ஆச்சார்யா |
கல்வி | எம்.பி.பி.எசு |
தொழில் | மருத்துவர், அரசியல்வாதி மற்றும் சமூகப்பணி |
இணையத்தளம் | nimabenacharya |
நிமாபென் பாவேசுபாய் ஆச்சார்யா (Nimaben Bhaveshbhai Acharya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] குசராத்து மாநிலத்தில் உள்ள அஞ்சார் தொகுதியில் இருந்து அதன் 12 ஆவது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] முன்னதாக இவர் குசராத்து குடும்பக் கட்டுப்பாடு குழுவில் பணியாற்றினார்.
சம்பவங்கள்
[தொகு]ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓர் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இவரது வாகனம் அடையாளம் தெரியாத ஆண்களால் தாக்கப்பட்டது, அவர்கள் காரின் கண்ணாடியை உடைத்தனர், ஆனால் ஆச்சார்யா மற்றும் அவரது ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சர்ச்சை
[தொகு]2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காந்தி அம்ருதியாவுடன் சேர்ந்து வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கியதாக மோர்பி மாவட்ட குற்றவியல் நடுவர் இவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார்.[3]
அரசியல் வாழ்க்கை
[தொகு]2002 & 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். ஆனால் விரைவில் 2007 ஆம் ஆண்டில் இவரது கணவர் மற்றும் 6 கூட்டு குழுமவுறுப்பினர்கள் பாரதிய சனதா கட்சிக்கு மாறினார்கள், நிமாபென் விரைவில் தனது கணவரின் வழியைப் பின்பற்றினார். [4]
2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் செகாவத்துக்கு வாக்களித்தபோது, கட்சி விரோத நடவடிக்கைகளால் இவர் காங்கிரசு கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். [5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Facebook Page". பார்க்கப்பட்ட நாள் 16 September 2018.
- ↑ "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "One-yr jail term for MLA Nima Acharya, ex-MLA Kanti Amrutiya".
- ↑ "Sitting Cong MLA's husband joins BJP". 8 April 2004.
- ↑ "15 rebels ignore Modi, vote for Patil - Indian Express".