உள்ளடக்கத்துக்குச் செல்

நிமாபென் ஆச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிமாபென் ஆச்சார்யா
Nimaben Acharya
குசராத்து சட்டப் பேரவையின் அவைத்தலைவர்
பதவியில்
27 செப்டம்பர் 2021 – 8 திசம்பர் 2022
முன்னையவர்இராசேந்திர திரிவேதி
சட்டமன்ற உறுப்பினர், குசராத்து சட்டப் பேரவை
பதவியில்
2012–2022
தொகுதிபுச்சு
பதவியில்
2002–2012
தொகுதிஅஞ்சார் சட்டமன்றத் தொகுதி
பதவியில்
1995–1998
தொகுதிஅப்தாசா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசுரேந்திரநகர்
தேசியம்இந்தியாஇந்தியர்
அரசியல் கட்சிபாரதிய சனதா கட்சி
துணைவர்பாவேசுபாய் எஃப். ஆச்சார்யா
கல்விஎம்.பி.பி.எசு
தொழில்மருத்துவர், அரசியல்வாதி மற்றும் சமூகப்பணி
இணையத்தளம்nimabenacharya.in

நிமாபென் பாவேசுபாய் ஆச்சார்யா (Nimaben Bhaveshbhai Acharya) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்.[1] குசராத்து மாநிலத்தில் உள்ள அஞ்சார் தொகுதியில் இருந்து அதன் 12 ஆவது சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] முன்னதாக இவர் குசராத்து குடும்பக் கட்டுப்பாடு குழுவில் பணியாற்றினார்.

சம்பவங்கள்[தொகு]

ஏப்ரல் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓர் இறுதிச் சடங்கிற்குச் சென்று கொண்டிருந்தபோது, இவரது வாகனம் அடையாளம் தெரியாத ஆண்களால் தாக்கப்பட்டது, அவர்கள் காரின் கண்ணாடியை உடைத்தனர், ஆனால் ஆச்சார்யா மற்றும் அவரது ஓட்டுநருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

சர்ச்சை[தொகு]

2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காந்தி அம்ருதியாவுடன் சேர்ந்து வாக்காளர்களை பணம் கொடுத்து வாங்கியதாக மோர்பி மாவட்ட குற்றவியல் நடுவர் இவருக்கு ஓர் ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

2002 & 2007 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் காங்கிரசு கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இவர் தனது அரசியல் வாழ்க்கையை இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து தொடங்கினார். ஆனால் விரைவில் 2007 ஆம் ஆண்டில் இவரது கணவர் மற்றும் 6 கூட்டு குழுமவுறுப்பினர்கள் பாரதிய சனதா கட்சிக்கு மாறினார்கள், நிமாபென் விரைவில் தனது கணவரின் வழியைப் பின்பற்றினார். [4]

2007 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில் பைரோன் சிங் செகாவத்துக்கு வாக்களித்தபோது, கட்சி விரோத நடவடிக்கைகளால் இவர் காங்கிரசு கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Facebook Page". பார்க்கப்பட்ட நாள் 16 September 2018.
  2. "TWELFTH GUJARAT LEGISLATIVE ASSEMBLY". பார்க்கப்பட்ட நாள் 19 May 2012.
  3. "One-yr jail term for MLA Nima Acharya, ex-MLA Kanti Amrutiya".
  4. "Sitting Cong MLA's husband joins BJP". 8 April 2004.
  5. "15 rebels ignore Modi, vote for Patil - Indian Express".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிமாபென்_ஆச்சார்யா&oldid=3873873" இலிருந்து மீள்விக்கப்பட்டது