நடேச சாஸ்திரி
நடேச சாஸ்திரி | |
---|---|
1903 க்கு முன் நடேச சாஸ்திரி | |
பிறப்பு | 1859 மனக்கல், திருச்சிராப்பள்ளி மாவட்டம்[1] |
இறப்பு | 1906 திருவல்லிக்கேணி |
தொழில் | எழுத்தாளர், அரசு அலுவலர் |
மொழி | தமிழ் |
தேசியம் | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
கல்வி | கலையில் இளநிலைப் பட்டம் |
கல்வி நிலையம் | சென்னைப் பல்கலைக்கழகம் |
கருப்பொருள் | நாட்டுபுறப் பாடல்கள் |
கையொப்பம் | |
எஸ். எம். நடேச சாஸ்திரி (S. M. Natesa Sastri, 1859-1906) பன்மொழி நூலாசிரியர் ஆவார். இவர் 1859 ஆகஸ்டு மாதத்தில் மகாலிங்க ஐயர் - அகிலாண்டேசுரி தம்பதிகளுக்கு திருச்சியில் பிறந்தார். இவர் ஆங்கிலம், வடமொழி, தமிழ் மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.
இளமை வாழ்க்கையும் கல்வியும்
[தொகு]கும்பகோணம் கல்லூரி மற்றும் சென்னை அரசாங்க கல்லூரி ஆகியவற்றில் படித்து இளங்கலை பட்டம் பெற்றவர். 1881 -ல் இந்திய சாசன சிற்ப ஆராய்ச்சி துறையில் இணைந்தார். இங்கு இராபர்ச் சிவல் என்பருக்கு உதவியாளராக இருந்தார். இங்கு இரண்டாண்டுகள் வேலை செய்தார், 1888ல் ஊட்டி சிறையிலும், 1890ல் பத்திரப் பதிவுத் துறையிலும் வேலை செய்தார்.
மரணம்
[தொகு]1906, ஏப்ரல் 11 ஆம் தேதியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது போடப்பட்ட அதிர்வெடியை கேட்டு அஞ்சி ஓடிய குதிரை இவரை உதைத்து கீழே தள்ளியதனால் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது நாற்பத்தேழு.[1]
நூல்கள்
[தொகு]- Folklore in Southern India (1884)[2]
- வால்மீகி இராமாயணம்
- தீனதயாளு[3]
- திக்கற்ற இரு குழந்தைகள்
- தக்காணத்துப் பூர்வ கதைகள்
- தக்காணத்து மத்திய காலக் கதைகள்
- தலையணை மந்திரோபதேசம் (1901) [4]
- மதிகெட்ட மனைவி
- மாமி கொலுவிருக்கை
- ஈசாப் கதைகள்
- தூக்குத் தூக்கி
ஆதாரங்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Chandrasekharan, G. (2008-11-13). "Chandra: My Great Grand Father Shri Pandit Natesa Sastri Avargal". Chandra. பார்க்கப்பட்ட நாள் 2019-11-10.
- ↑ "Folklore in southern India". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்ரல் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ http://www.jeyamohan.in/41915#.VSnhEvmUfyI முதல் நாவல் விவாதம் ஜெயமோகன் இணையதளம்
- ↑ "Writer Jeyamohan". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 23 January 2021.