நடேச சாஸ்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடேச சாஸ்திரி

1903 க்கு முன் நடேச சாஸ்திரி
தொழில் எழுத்தாளர், அரசு அலுவலர்
நாடு பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
நாட்டுரிமை பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
கல்வி கலையில் இளநிலைப் பட்டம்
கல்வி நிலையம் சென்னைப் பல்கலைக்கழகம்
கருப்பொருட்கள் நாட்டுபுறப் பாடல்கள்
கையொப்பம் Natesa Sastry -signature.jpg

எஸ். எம். நடேச சாஸ்திரி (S. M. Natesa Sastri, 1859-1906) பன்மொழி நூலாசிரியர் ஆவார். இவர் 1859 ஆகஸ்டு மாதத்தில் மகாலிங்க ஐயர் - அகிலாண்டேசுரி தம்பதிகளுக்கு திருச்சியில் பிறந்தார். இவர் ஆங்கிலம், வடமொழி, தமிழ் மொழிகளில் பல நூல்களை எழுதியுள்ளார்.

இளமை வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

கும்பகோணம் கல்லூரி மற்றும் சென்னை அரசாங்க கல்லூரி ஆகியவற்றில் படித்து பி.ஏ பட்டம் பெற்றவர். 1881 -ல் இந்திய சாசன சிற்ப ஆராய்ச்சி துறையில் இணைந்தார். இங்கு ராபர்ச் சிவல் என்பருக்கு உதவியாளராக இருந்தார். இங்கு இரண்டாண்டுகள் வேலை செய்தார், 1888ல் ஊட்டி சிறையிலும், 1990ல் பத்திரப் பதிவுத் துறையிலும் வேலை செய்தார்.

மரணம்[தொகு]

1906, ஏப்ரல் 11 ஆம் தேதியில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயத்தில் நடந்த திருவிழாவில் கலந்துகொண்டார். அப்போது போடப்பட்ட அதிர்வெடியை கேட்டு அஞ்சி ஓடிய குதிரை இவரை உதைதது கீழே தள்ளியதனால் உயிரிழந்தார். அப்போது இவருக்கு வயது நாற்பத்தேழு.[1]

நூல்கள்[தொகு]

  • Folklore in Southern India (1884)[2]
  • வால்மீகி இராமாயணம்
  • தீனதயாளு[3]
  • திக்கற்ற இரு குழந்தைகள்
  • தக்காணத்துப் பூர்வ கதைகள்
  • தக்காணத்து மத்திய காலக் கதைகள்
  • தலையணை மந்திரோபதேசம் (1901) [4]
  • மதிகெட்ட மனைவி
  • மாமி கொலுவிருக்கை
  • ஈசாப் கதைகள்
  • தூக்குத் தூக்கி

ஆதாரங்கள்[தொகு]

  1. Chandrasekharan, G. (2008-11-13). "Chandra: My Great Grand Father Shri Pandit Natesa Sastri Avargal".
  2. "Folklore in southern India". பார்த்த நாள் 12 ஏப்ரல் 2015.
  3. http://www.jeyamohan.in/41915#.VSnhEvmUfyI முதல் நாவல் விவாதம் ஜெயமோகன் இணையதளம்
  4. "Writer Jeyamohan". பார்த்த நாள் 23 January 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடேச_சாஸ்திரி&oldid=3095377" இருந்து மீள்விக்கப்பட்டது