உள்ளடக்கத்துக்குச் செல்

நடத்தை அறிவியல்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நடத்தை அறிவியல்கள் (Behavioural Sciences) என்பது, இயற்கையில் உயிரினங்களுக்கு உள்ளும் அவற்றுக்கு இடையிலும் உள்ள நடத்தைகள் மற்றும் உத்திகள் பற்றி ஆய்வு செய்யும் எல்லாத் துறைகளையும் ஒட்டுமொத்தமாகக் குறிக்கும் ஒரு சொற்றொடர் ஆகும். இது தொடர்பான ஆய்வுகள், மனிதர் மற்றும் விலங்குகளின் நடத்தைகள் பற்றிக் கட்டுப்பாடான இயற்கையோடு ஒட்டிய சோதனை அவதானிப்புக்கள் மூலம் நடத்தப்படுகின்றன.

நடத்தை அறிவியலுக்கும் சமூக அறிவியல்களுக்கும் இடையேயான வேறுபாடு

[தொகு]

நடத்தை அறிவியல், சமூக அறிவியல் என்னும் இரண்டும் சில சமயங்களில் ஒன்றுடனொன்று குழப்பிக் கொள்ளப்படுகின்றன. இவ்விரு பரந்த துறைகளும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவையாகவும், இரண்டுமே நடத்தைகள் பற்றிய முறையான ஆய்வுகளில் ஈடுபடுபவையாகவும் இருந்தபோதும், நடத்தைகளின் பல்வேறுபட்ட பரிமாணங்களை ஆய்வு செய்வதிலான அறிவியல் மட்டம் வேறுபாடாக உள்ளது. நடத்தை அறிவியல்கள், சமூக முறைமையில், உயிரினங்களுக்கு உள்ளும் அவற்றுக்கு இடையிலும் இடம்பெறும் தீர்மானச் செயல்முறைகள் (decision processes) மற்றும் தொடர்பு உத்திகள் (strategies) என்பவற்றைச் சிறப்பாக ஆராய்கின்றன. இவை உளவியல், சமூக நரம்பறிவியல் (Social neuroscience) போன்ற துறைகளுடன் சம்பந்தப்பட்டுள்ளன. அதேவேளை சமூக அறிவியல்கள் சமூக முறைமையின் அமைப்பு மட்டத்திலான செயல்முறைகள் பற்றியும், சமூகச் செயல்முறைகளிலும், சமூக அமைப்பிலும் அவற்றின் தாக்கம் பற்றியும் ஆய்வு செய்கின்றன. சமூக அறிவியல்கள் சமூகவியல், பொருளியல், வரலாறு மற்றும் அரசறிவியல் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளன.

நடத்தை அறிவியல்கள், இயற்கை அறிவியல்களும், சமூக அறிவியல்களும் ஒன்றையொன்று சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது எனலாம்.

இயற்கை அறிவியல்கள்
இயற்பியல்சார் அறிவியல்கள் வேதியியல்சார் அறிவியல்கள் உயிரியல்சார் அறிவியல்கள் அறிதிறன் அறிவியல்கள்
நடத்தை அறிவியல்கள்
Neural-(Decision sciences) Social-(தொடர்பு அறிவியல்கள்)
உளவியல் including சமூக உளவியல் Cognitive organization Theory மானிடவியல் நிறுவன நடத்தையியல் (Organizational behaviour)]].]]
Psychobiology மேலாண்மை அறிவியல் and செய்பணி ஆய்வியல் Organization science & Psycho-Economics சமூக வலையமைப்பு
சமூக நரம்பறிவியல் விலங்கின நடத்தையியல் Memetics Organizational ecology
சமூக அறிவியல்கள்
சமூகவியல் பொருளியல் அரசறிவியல் பொருளாதாரச் சமூகவியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடத்தை_அறிவியல்கள்&oldid=2740388" இலிருந்து மீள்விக்கப்பட்டது