நகர அருங்காட்சியகம், கோர்கத்ரி
நிறுவப்பட்டது | 2006 |
---|---|
அமைவிடம் | கோர்கத்ரி, பெசாவர், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
ஆள்கூற்று | 34°00′28″N 71°34′46″E / 34.0078°N 71.5795°E |
உரிமையாளர் | கைபர் பக்துன்வா மாகாணம் அரசு |
வலைத்தளம் | www |
நகர அருங்காட்சியகம் (City Museum) என்பது பாக்கித்தான் கோர்கத்ரி, பெசாவர், கைபர் பக்துன்வா மாகாணம் ஆகியவற்றின் தொல்பொருள் தளத்தில் கிடைத்தப் பொருட்களைக் கொண்டு நிறுவப்பட்ட ஒன்றாகும். இதை கைபர் பக்துன்க்வாவின் முதல்வரான அக்ரம் கான் துரானி 2006 மார்ச் 23 அன்று திறந்து வைத்தார். இதில் தொல்லியல், இனவியல் மற்றும் தொல்பொருட்கள் என்ற மூன்று காட்சியகங்கள் உள்ளன. பெசாவரின் தொல்பொருள் மற்றும் இனவியல் விவரங்கள் பற்றிய விரிவான தகவல்களை வழங்கும் பிரிட்டிசு காலத்தின் தொல்பொருட்களின் கண்காட்சிக்கு பிந்தையது மிகச் சமீபத்திய கூடுதலாகும். [1] [2]
வரலாறு
[தொகு]பெசாவரில் கோர்கத்ரி மிக உயர்ந்த இடமாகும். இது பழைய பெசாவரின் சுவர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. [3] வரலாற்று காலங்களில் பெரும் சான்றுகளைக் கொண்ட தளம் இந்தோ கிரேக்கர்களிடமிருந்து அல்லது அதற்கு முந்தைய காலத்திலிருந்தே தொடங்கியது. கோர்கத்ரி வளாகத்தின் தற்போதைய அமைப்பு கி.பி 1640 இல் முகலாய பேரரசர்களான ஷாஜகானின் மகள் ஜஹானாரா பேகம் என்பவரால் நிறுவப்பட்டது.[1][4]
அகழ்வாராய்ச்சி
[தொகு]1994 முதல் 1995 வரை இங்கு அகழ்வாராய்ச்சி நடந்தது. அன்றிலிருந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் தொடர்ச்சியான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மத்திய ஆசியா மற்றும் ஆப்கானித்தான் மற்றும் பிற பகுதிகளிலிருந்து பெசாவருக்கு வந்த வணிகர்களுக்கு இந்த வளாகம் கேரவன்செராய் எனப்படும் தங்கும் விடுதியாக இருந்துள்ளது. [5] இது இரண்டு நினைவுச்சின்ன நுழைவாயில்கள், ஜாமியா மஸ்ஜித் மற்றும் ஹமாம் மற்றும் நான்கு பக்கங்களில் சிறிய அறைகள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இப்பகுதி இப்போது நவீன கட்டிடங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஒரு இந்துக் கோவிலில் நுழைவாயில்கள் மற்றும் சில சிறிய கலங்கள் மட்டுமே உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் தொல்பொருள் காட்சிக்கூடம் பெசாவர் பள்ளத்தாக்கின் தொடர்ச்சியான சுயவிவரத்தை கோர்கத்ரி தளத்திலிருந்து மீட்கப்பட்ட அகழ்வாராய்ச்சி பொருட்களின் வடிவத்தில் பிரதிபலிக்கிறது. கைபர் பக்துன்க்வாவின் தொல்பொருள் இயக்குநரகம் மற்றும் அருங்காட்சியகங்கள் தலைமையிலான அகழ்வாராய்ச்சி மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாவது காட்சிக்கூடம் பெசாவரின் இனவியல் கலாச்சாரத்தைக் கொண்டுள்ளது. அங்கு வீட்டுப் பொருட்கள், பாரம்பரிய ஆடைகள், ஆயுதங்கள், ஆபரணங்கள், இசைக்கருவிகள், கலைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.[1]
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "City Museum, Gorkhatri". www.kparchaeology.com. Archived from the original on 1 டிசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "City museum, a rich source of studying archaeological profile of ancient Peshawar". www.thefreelibrary.com. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ "Peshawar: Historic City of the Frontier". www.khyber.org. பார்க்கப்பட்ட நாள் 29 November 2017.
- ↑ "Gorkhatri Peshawar". emap.pk. Archived from the original on 1 December 2017. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.
- ↑ "Peshawar: Oldest Living City in South Asia". www.dawn.com. பார்க்கப்பட்ட நாள் 30 November 2017.