தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம், புதுடில்லி.
வகை | கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 1962 |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்புறம் |
நிறங்கள் | |
சுருக்கப் பெயர் | NUEPA |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.nuepa.org |
தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் (National University of Educational Planning and Administration) தெற்கு புதுதில்லியில் உள்ள 17-பி, அரபிந்தோ மார்க் சாலையில் அமைந்துள்ளது[1] . இது பள்ளிக் கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைக்கான ஒரே பல்கலைக் கழகமாகும். இப்பல்கலைக் கழகம், இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது.[2][3][4].
வரலாறு
[தொகு]தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகமானது, முதன்முதலில் 1962ஆம் ஆண்டு யுனெஸ்கோவிற்குரிய கல்வி திட்டமிடுபவர்கள், நிர்வாகிகள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கான ஆசிய மையமாகத் தொடங்கப்பட்டது. பின்னர் 1965ல் இது ஆசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனமாக உருவானது. அதன்பின் அந்நிறுவனம் 1973ல் கல்வி திட்டமிடுபவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கான தேசிய கல்லூரியாகக் மாறியது. பின்னர் மீண்டும் 1979ல் 'தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மை நிறுவனம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக 2006 ஆம் ஆண்டு பல்கலைக்கழகமாகத் தரமுயர்த்தப்பட்டு தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகமாக செயற்படத் தொடங்கியது[5][6].
ஆட்சிக் குழு
[தொகு]ஆட்சிக்குழு உறுப்பினர்கள் | |||
---|---|---|---|
பெயர் | குறிப்பு | ||
தலைவர் | திரு.பிரகாசு யாவடேகர், மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், இந்திய அரசு[8] | ||
யந்தியாலா பி.கி. திலக் | துணை வேந்தர் [8] | ||
பசவராசு சுவாமி | பல்கலைக்கழகப் பதிவாளர் [8] | ||
பி.பி.சக்சேனா | பிரிவு அலுவலர், கல்வி,நிர்வாகம் [8] | ||
செயப்பிரகாசு தாமி | பிரிவு அலுவலர், அலுவலக நிர்வாகம் [8] |
துறைகள்
[தொகு]இந்தப் பல்கலைக்கழகமானது எட்டு கல்விசார் துறைகளையும், சிறந்த மேலாண்மைக்கான இரண்டு மையங்களையும் கொண்டுள்ளது. அவை:
- கல்வித்திறன் மேம்பாடு மற்றும் பயிற்சித் துறை
- கல்வித் திட்டமிடல் துறை
- கல்வி நிர்வாகத் துறை
- கல்வி நிதித் துறை
- கல்வி கொள்கைகளுக்கானத் துறை
- பள்ளிக் கல்வி மற்றும் முறைசாரா கல்வித் துறை
பாடப் பிரிவுகள்
[தொகு]- ஆய்வியல் நிறைஞர் பட்டம்
- முனைவர் பட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bengal to bring all BEd colleges under one roof". The Times of India. Sep 6, 2014. http://m.timesofindia.com/city/kolkata/Bengal-to-bring-all-BEd-colleges-under-one-roof/articleshow/41812905.cms. பார்த்த நாள்: 6 October 2014.
- ↑ "Leadership drive to ensure quality education". The Times of India. Aug 28, 2014. http://m.timesofindia.com/articleshow/41076367.cms. பார்த்த நாள்: 6 October 2014.
- ↑ "National University of Educational Planning and Administration". nuepa.org. Archived from the original on 3 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 20 December 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Reforming teacher management in the public school system". மின்ட். http://www.livemint.com/Opinion/p32eZPAacVTYJt1fXZ1oZP/Reforming-teacher-management-in-the-public-school-system.html. பார்த்த நாள்: 18 September 2015.
- ↑ "History National University of Educational Planning and Administration". archive.org. Archived from the original on June 25, 2014. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
- ↑ "Budget 2014: Falls short of expectation". The Times of India. Jul 14, 2014. http://m.timesofindia.com/articleshow/38348864.cms. பார்த்த நாள்: 6 October 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2017-05-16.
- ↑ 8.0 8.1 8.2 8.3 8.4 "National University of Educational Planning and Administration admins". nuepa.org. Archived from the original on 8 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 19 September 2015.