உள்ளடக்கத்துக்குச் செல்

திக்குவல்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திக்குவல்லை இலங்கை, மாத்தறை மாவட்டத்தில் மாத்தறை-அம்பாந்தோட்டை வழியில் உள்ள ஒர் ஊர். இதன் நகர்ப் புறத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழ்ந்த போதிலும் ஒட்டு மொத்தமாகக் கணக்கெடுக்கும் போது சிங்களவர்களே பெரும்பான்மையாக உள்ளனர். இவ்வூரின் பெரும் பகுதி எல்லைக்குள்ளேயே இலங்கையின் புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான ஊதற்துளை காணப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய கடிகாரப் பொறியைக் கொண்டிருப்பதாகக் கூறப்படும் வரலாற்றுப் புகழ் மிக்க வெவுருகன்னல விகாரையும் இங்கேயே காணப்படுகிறது.

திக்குவல்லையில் பிறந்து புகழ்பெற்றோர்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்குவல்லை&oldid=928904" இலிருந்து மீள்விக்கப்பட்டது