தயோபாசுபோரைல் புரோமைடு
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
வேறு பெயர்கள்
தயோபாசுபோரைல் முப்புரோமைடு
பாசுபரசு தயோபுரோமைடு பாசுபரோதயோயிக் முப்புரோமைடு | |||
இனங்காட்டிகள் | |||
3931-89-3 | |||
ChemSpider | 69937 | ||
EC number | 223-502-3 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 77530 | ||
| |||
பண்புகள் | |||
PSBr3 | |||
வாய்ப்பாட்டு எடை | 302.75 g·mol−1 | ||
தோற்றம் | மஞ்சள் படிகங்கள்[1][2] | ||
அடர்த்தி | 2.85 கி செ.மீ−3[2] | ||
உருகுநிலை | 37.8 °C (100.0 °F; 310.9 K) | ||
கொதிநிலை | 212 °C (414 °F; 485 K) சிதைவடையும்[2] | ||
கட்டமைப்பு | |||
படிக அமைப்பு | கனசதுரம் | ||
புறவெளித் தொகுதி | Pa3, No. 205 | ||
Lattice constant | a = 11.03 Å, b = 11.03 Å, c = 11.03 Å | ||
மூலக்கூறு வடிவம் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயோபாசுபோரைல் புரோமைடு (Thiophosphoryl bromide) என்பது PSBr3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1]
தயாரிப்பு
[தொகு]பாசுபரசு முப்புரோமைடுடன் பாசுபரசு பெண்டாசல்பைடு அல்லது தனிமநிலை கந்தகத்தைச் சேர்த்து 130 பாகை செல்சியசு வெப்பநிலையில் மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தி தயோபாசுபோரைல் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.[3]
P4S7 என்ற வாய்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் பாசுபரசு சல்பைடை புரோமினேற்றம் செய்தும் தயோபாசுபோரைல் புரோமைடு தயாரிக்கப்படுகிறது.:[1]
- 3 P4S7 + 12 Br2 → 2 PBr3 + 2 PSBr3 + 2 P2S6Br2 + 2 P2S5Br4
கட்டமைப்பு மற்றும் பண்புகள்
[தொகு]தயோபாசுபோரைல் புரோமைடு நான்முகி வடிவ மூலக்கூறும் C3v என்ற மூலக்கூறு சமச்சீரும் கொண்ட சேர்மமாகும். வாயு மின்னணு விளிம்பு விலகல் ஆய்வுகளின் படி பாசுபரசு- கந்தகம் பிணைப்பு நீளம் 1.895 Å என்றும் பாசுபரசு-புரோமின் பிணைப்பு நீளம் 2.193 Å என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் S=P−Br பிணைப்புக் கோணம் 116.2° என்றும் Br−P−Br பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 101.9° என்றும் அளவிடப்பட்டுள்ளன.[4]
கார்பன் டைசல்பைடு, குளோரோஃபார்ம் மற்றும் டை எத்தில் ஈதர் ஆகியவற்றில் தயோபாசுபோரைல் புரோமைடு கரையும்.[3]
வினைகள்
[தொகு]மற்ற பாசுபோரைல் மற்றும் தயோபாசுபோரைல் ஆலைடுகளைப் போலவே,[1] தயோபாசுபோரைல் புரோமைடும் உடனடியாக நீராற்பகுப்புக்கு உட்படுகிறது. இலூயிசு அமிலங்களுடன் அணுக்கருநாட்டப் பதிலீட்டு வினையில் ஈடுபட்டு கூட்டு விளைபொருளை உருவாக்குகிறது.[5] இலித்தியம் அயோடைடுடனான வினையில் கலப்பு தயோபாசுபோரைல் ஆலைடுகளான PSBr2I மற்றும் PSBrI2 சேர்மங்களை உருவாக்குகிறது. தயோபாசுபோரைல் ஆலைடுகளை ஆனால் தயோபாசுபோரைல் அயோடைடு (PSI3) உருவாவதில்லை. [6] தயோபாசுபோரைல் புரோமைடு கரிமத் தொகுப்பு வினைகளில் பயன்படுகிறது. சல்பாக்சைடுகளை தயோயீத்தர்களாக ஒடுக்கவும்[7] சல்பைன்களை தயோகீட்டோன்களாக மாற்றவும் இது பயன்படுகிறது..[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 501–503. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- ↑ 2.0 2.1 2.2 William M. Haynes, ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 4-78. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754293.
- ↑ 3.0 3.1 Arthur D. F. Toy (1975). The Chemistry of Phosphorus. Permanon Texts in Inorganic Chemistry. Vol. 3. Permanon Press. p. 438. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781483139593.
- ↑ Jacob, E. Jean; Danielson, Donald D.; Samdal, Svein (1980). "An electron diffraction determination of the molecular structures of phosphoryl bromide and thiophosphoryl bromide". J. Mol. Struct. 62 (2): 143–155. doi:10.1016/0022-2860(80)85232-X. Bibcode: 1980JMoSt..62..143J.
- ↑ van der Veer, W.; Jellinek, F. (1970). "Adducts of thiophosphoryl compounds with metal halides. Part III: Addition compounds of phosphoryl bromide and thiophosphoryl bromide". Recl. Trav. Chim. Pays-Bas 89 (8): 833–844. doi:10.1002/recl.19700890809.
- ↑ Dillon, K. B.; Craveirinha Dillon, M. G.; Waddington, T. C. (1977). "The identification of some new thiophosphoryl compounds containing P–I bonds by means of 31P N.M.R. spectroscopy". Inorg. Nucl. Chem. Lett. 13 (8): 349–353. doi:10.1016/0020-1650(77)80109-8.
- ↑ Still, I. W. J.; Reed, J. N.; Turnbull, K. (1979). "Thiophosphoryl bromide: a new reagent for the reduction of sulfoxides to sulfides". Tetrahedron Lett. 20 (17): 1481–1484. doi:10.1016/S0040-4039(01)86183-9.
- ↑ Kuipers, J. A. M.; Lammerink, B. H. M.; Still, I . W. J.; Zwanenburg, B. (1981). "Phosphorus Pentasulfide and Thiophosphoryl Bromide: Facile Reagents for the Reduction of Sulfines to Thiones". Synthesis 1981 (4): 295–297. doi:10.1055/s-1981-29423. https://research.utwente.nl/en/publications/phosphorus-pentasulfide-and-thiophosphoryl-bromide-facile-reagents-for-the-reduction-of-sulfines-to-thiones(807b64c5-6275-40f9-8560-c76f81c41a96).html.