உள்ளடக்கத்துக்குச் செல்

தங்கமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்க மீன்
Aquarium scene with a bright orange goldfish swimming, tail at lower left, head at upper right, with some driftwood and another goldfish, white and orange, behind.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
சைப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சைப்பிரினிடே
பேரினம்:
கராசியசு
இனம்:
க. அராடசு
இருசொற் பெயரீடு
கராசியசு அராடசு
(லின்னேயசு, 1758)[2][3]

தங்கமீன் (goldfish, கராசியசு அராடசு) நன்னீரில் வாழும் மீன் ஆகும். இது சைப்பிரினிடே குடும்ப வகையை சேர்ந்தது. ஆரம்ப காலத்திலிருந்து இம்மீன் வீடுகளில் வளர்க்கப்பட்டது. மேலும் பொதுவாக இவை மீன் தொட்டிகளில் வைக்கப்படும் மீன் ஆகும்.

ஒப்பீட்டளவில் கெண்டை குடும்பத்தின் சிறிய அங்கத்தவரான தங்கமீனானது (கொய் கெண்டை, குரூஸின் கெண்டை ஆகியவற்றை உள்ளடக்கியது), கிழக்கு ஆசியாவை பிறப்பிடமாக கொண்ட குறைவான வண்ணமுடைய கெண்டை மீனின் வீட்டில் வளர்க்கப் பழக்கப்படுத்தப்பட்ட வகையாக உள்ளது. இது ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் முதன்முதலாக சீனாவில் வீடுகளில் வளர்க்கப்பட்டது. மேலும் இதன் வேறுபட்ட இனங்கள் விருத்தி செய்யப்பட்டு வருகிறது. தங்க மீன்களின் இனங்கள் அவற்றின் அளவு, உடல் வடிவம், மீன் துடுப்பு கட்டமைப்பு மற்றும் நிறத்தை (வெவ்வேறு கலவைகளானா வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, பழுப்பு, கருப்பு) பொறுத்துப் பெரிதும் வேறுபடும்.

தங்க மீன்களின் மாறும் தன்மையானது பொதுவாக ஏனைய சைபிரிட் இனங்களில் அதாவது பொதுவான கெண்டைகள், ஐரோப்பிய மீன் வகைகளிலிருந்து எழுந்தது.

வகைப்பாடு

[தொகு]

பல நூற்றாண்டுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட வளர்ப்பு முறைகளில் மேற்கொள்ளப்படும் இனப்பெருக்கத்தால் வேறுபட்ட நிறங்களில் உள்ள பல வகை மீன்கள் பெறப்படுகின்றன. அதில் சில வழமையான தங்க நிறத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது. மேலும் சில உடல் வடிவங்களும், துடுப்பு, கண் என்பனவும் மாறுபட்டுக் காணப்படும். சில வகை தங்க மீன்கள் தொட்டிகளில் மட்டுமே வளரும். இவை மற்றைய நீர் நிலைகளில் உள்ள தங்க மீன்களில் இருந்து வேறுபட்டிருக்கும். தற்காலத்தில் சீனாவில் 300 இனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. பெரும்பான்மையான தங்கமீன்கள் சீனாவில் இருந்தே உற்பத்தியாகின்றன. சில பிரதான வகைகளாவன:

பொதுவான தங்கமீன்கள் கருப்பு தொலைநோக்கி குமிழிக் கண்
பொதுவான தங்கமீன்கள் அதனது மற்றய தங்க மீனான புரிசியன் கெண்டையை விட அதன் நிறத்தால் மட்டுமே வேறுபட்டு இருக்கும். பொதுவான தங்க மீன்கள் சிவப்பு, ஆரேஞ்சு/ தங்க நிறம், வெள்ளை, கருப்பு, மஞ்சள் போன்ற நிறங்களால் பல வகைகளாக காணப்படுகிறது. இது கருப்பு நிறத்தால் மாறுபட்ட தொலைநோக்கி தங்க மீன் ஆகும். இது துருத்திக்கொண்டிருக்கும் கண் ஜோடிகளை கொண்டுள்ளது. போபேய, குரோ என்றும் அழைக்கப்படும். ஒரு சிறிய அழகுமிக்க குமிழி கண்களைக் கொண்டது. இக் கண்கள் திரவம் நிரப்பிய பை போன்று காட்சியளிக்கும்.
சீனக்கண் வால்மீன் விசிறிவால்
அழகுநயமிக்க சீன கண் தங்க மீன். இது இரட்டை வால் கொண்டுள்ளதுடன் இதன் கண்கள் வானத்தை நோக்கிய பார்வை கொண்டதாக இருக்கும். வால்மீன்கள் ஐக்கிய அமெரிக்காவின் மிக பொதுவான கண்கவர் மீன் வகைகளில் ஒன்றாகும்.இது பொதுவான தங்க மீனுக்கு ஒப்பானது என்றாலும் இதன் மெலிந்த உடல் அமைப்பும் சிறிய தோற்றமும் இதனை பொதுவான தங்க மீனில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. விசிறி வால் தங்க மீன் ஆனது முட்டை வடிவ உடல் அமைப்பை கொண்டதுடன் உயர்ந்த முதுகு துடுப்புக்களையும் கொண்டது.

உயிரியல்

[தொகு]

அளவு

[தொகு]

2008 ஏப்ரல் மாதம், மிக பெரிய தங்க மீனாக 19 அங்குலம் (49 செமீ ) உடைய தங்க மீன் நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசியால் அறிவிக்கப்பட்டது. இதேவேளை இங்கிலாந்தில் தொட்டியில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட "கோல்டி" என்ற பெயர் கொண்ட தங்கமீன் 15 அங்குலம் (38 செமீ ) உம், 0.91கிலோகிராம் நிறை கொண்டதாகவும் இருந்தது. இது நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மீனுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய தங்க மீன் ஆகும்.

பார்வை

[தொகு]

தங்க மீன்கள் பார்வை திறன் கொண்ட மீன் வகை ஆகும். இவை நான்கு வகையான கூம்பு செல்களை கொண்டுள்ளதுடன் சிவப்பு, பச்சை, நீலம், ஊதா ஆகிய வேறுபட்ட நிறங்களை உணரக்கூடியது. இதற்கு நான்கு வேறுபட்ட முதன்மை நிறங்களை பிரித்தறியும் திறன் உள்ளது.

அறிவாற்றல் திறன்

[தொகு]

தங்கமீன் வலுவான துணை கற்றல் திறன்களையும், அதே போல் சமூக கற்றல் திறன்களையும் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லலாது, தங்கள் காட்சி கூர்மையால் தனிப்பட்ட மனிதர்கள் வேறுபடுத்தி  அடையாளம் காண்கிறது. உரிமையாளர்களை காணும் போது இதன்  செயற்பாடு வேறுபடும்  (தொட்டியை சுற்றி வேகமாக நீச்சலடித்தல்,  உணவுக்காக வாயை அசைத்தல்) மற்ற மக்கள் தொட்டி அணுகும் போது மறைந்து கொள்ளவும் செய்யும்.

தங்க மீன்களுக்கு  மூன்று மாதத்திற்கு நினைவக சுழற்சி இருக்கும்  மற்றும் பல்வேறு வடிவங்கள், நிறங்கள் மற்றும் ஒலிகள் வேறுபடுத்தி அறியும் திறன் உள்ளது .நேர்மறை வலுவூட்டல் பயன்படுத்தி, வேறுபட்ட நிறங்களை கொண்ட ஒளி சமிஞ்சைகளை அடையாளம் காண பயிற்று விக்க முடியும். அதன் உணவோடு தொடர்பு பட்ட  நிறங்களுக்கு கூடுதலான பதில் தருவதாக அதன் செயற்பாடுகள் இருக்கும்.

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. NatureServe (2016). "Carassius auratus ". IUCN Red List of Threatened Species 2016. https://www.iucnredlist.org/details/166083/0. பார்த்த நாள்: 14 April 2017. 
  2. "USGS-NAS, Non-indigenous Aquatic Species". பார்க்கப்பட்ட நாள் 2015-04-29.
  3. "Carassius auratus (Linnaeus, 1758)". Fishbase. பார்க்கப்பட்ட நாள் 2015-04-29.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Carassius auratus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • "Carassius auratus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 5 October 2004.
  • Froese, Rainer, and Daniel Pauly, eds. (2004). Carassius auratus auratus in FishBase. September 2004 version.
  • Bristol Aquarists' Society: Goldfish — Photographs and descriptions of the different goldfish varieties.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கமீன்&oldid=3307565" இலிருந்து மீள்விக்கப்பட்டது