ஜோசப்பின் மேரி
தனிநபர் தகவல் | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறந்த பெயர் | Josephine Mary Singarayar | ||||||||||||||||
தேசியம் | மலேசியர் | ||||||||||||||||
பிறப்பு | 29 சூன் 1967 ஈப்போ, பேராக், மலேசியா | ||||||||||||||||
உயரம் | 168 cm | ||||||||||||||||
எடை | 50 kg | ||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||
விளையாட்டு | தட களம் | ||||||||||||||||
நிகழ்வு(கள்) | 400 மீட்டர் | ||||||||||||||||
கழகம் | மலேசிய விளையாட்டுப் பயிற்சியாளர் | ||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
ஜோசப்பின் மேரி (பிறப்பு: 29 சூன் 1967); (மலாய்: Josephine Mary; ஆங்கிலம்: Josephine Mary Singarayar) என்பவர் மலேசியாவின் தடகள ஓட்டப் பந்தய வீராங்கனை.
1988-ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் பெண்களுக்கான 400 மீட்டர் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்தவர்.[1]
வாழ்க்கைக் குறிப்புகள்
[தொகு]ஜோசப்பின் மேரி, 1967-ஆம் ஆண்டு, மலேசியா, பேராக், ஈப்போ நகரில் பிறந்தவர். ஈப்போ சிலிபின் தார்சிசியன் கான்வெண்ட் பள்ளியில் (Tarcisian Convent Ipoh) தொடக்கக் கல்வியையும் உயர்நிலைக் கல்வியையும் பெற்றார்.
பின்னர் டெலவேர் பல்கலைக்கழகத்தில் (University of Delaware), தடகள பயிற்சியில் உயர்க்கல்வியைப் பெற்றார்.[2]
பள்ளியில் படிக்கும் காலத்தில் தட கள போட்டிகளில் சிறந்து விளங்கினார். அத்ன் பின்னர் பேராக் மாநில விளையாட்டுப் போட்டிகள்; மலேசியப் பள்ளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்; |ஆசிய விளையாட்டுப் போட்டிகள் என பல போட்டிகளில் கலந்து கொண்டார்.
ஜோசப்பின் மேரியின் சாதனைகள்
[தொகு]- 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 800 மீட்டர் - வெண்கலம்
- 1988 சியோல் ஒலிம்பிக் விளையாட்டுகள் - 800 மீட்டர் - 4-ஆம் இடம்
- 1990 பெய்ஜிங் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 4×400 மீட்டர் - வெண்கலம்
தற்சமயம், பேராக் மாநிலப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகின்றார். தவிர மலேசிய விளையாட்டு மன்றத்தின் (Majlis Sukan Negara Malaysia) தட களப் பயிற்சியாளராகவும் பணி செய்தவர்.
குடும்பத் தகவல்
[தொகு]ஜோசப்பின் மேரியின் கணவர் சாம்சன் வல்லபாய் (Samson Vallabouy). இவரும் மலேசிய, அனைத்துலக ஓட்டப் பந்தய வீரர். 1989-ஆம் ஆண்டு தென்கிழக்கு ஆசிய விளையாட்டுகள் (1989 SEA Games) போட்டியில் 1 நிமிடம் 48.29 வினாடிகள் ஓடி தங்கம் வென்றவர்.[3]
ஜோசப்பின் மேரியின் மகள் செரின் சாம்சன் வல்லபாய் (Shereen Samson Vallabouy). இவரும் மலேசிய, அனைத்துலக ஓட்டப் பந்தயத் துறையில் சாதனை படைத்து வருகிறார். மலேசியாவின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குகின்றார்.[4]
அமெரிக்காவின் தேசிய கல்லூரிகளுக்கான தடகளச் சங்கம் (US National Collegiate Athletic Association (NCAA), கடந்த 2022 மார்ச் 12-ஆம் தேதி, ஓர் உள்ளரங்கப் போட்டியை நடத்தியது.
அதில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில், செரின் சாம்சன் வல்லபாய் 53.79 வினாடிகளைப் பதிவுச் செய்து சாதனை செய்து உள்ளார். இது மலேசியச் சாதனை ஆகும்.[5] மலேசிய மாமன்னரும்; மலேசியப் பிரதமரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து உள்ளனர்.[6]
வெளி இணைப்புகள்
[தொகு]- ஜோசப்பின் மேரி படங்கள்
- 2017-ஆம் ஆண்டில் ஜோசப்பின் மேரி; டி.எச். ராகா வானொலியின் நேரலைக் காணொலி
- ஜோசபின் மேரி சிங்கராயர் வாழ்க்கை வரலாறு
மேற்கோள்
[தொகு]- ↑ "Olympedia – Josephine Mary Singarayar - 400 metres, Women (Olympic)". www.olympedia.org. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "ICECP::International Coaching Enrichment Certificate Program". www1.udel.edu. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "Samson, who has three SEA Games gold medals, was the country's best 800m runner after B. Rajkumar who still holds the national record". www.pressreader.com. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "நாட்டின் புதிய நம்பிக்கை நட்சத்திரமாகின்றார் ஷெரீன் சாம்சன் வல்லபௌய்". BERNAMA (in ஆங்கிலம்). 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ "Daughter Shereen's rise in athletics monitored since 2019: Ex-athlete Josephine Mary". The Vibes (in ஆங்கிலம்). 16 March 2022. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
- ↑ March 17, Bernama / Bernama (17 March 2022). "King, Queen congratulate Shereen Vallabouy for stunning 400m win". The Edge Markets. Archived from the original on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 17 March 2022.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)CS1 maint: numeric names: authors list (link)