ஜொகூர் மிருகக்காட்சிசாலை
ஜொகூர் மிருகக்காட்சிசாலை Zoo Johor | |
---|---|
1°27′27.0″N 103°45′08.1″E / 1.457500°N 103.752250°E | |
திறக்கப்படும் தேதி | 1928 |
அமைவிடம் | ஜொகூர் பாரு, ஜொகூர், மலேசியா |
நிலப்பரப்பளவு | 12.5 ha (31 ஏக்கர்கள்) |
ஜொகூர் மிருகக்காட்சிசாலை (மலாய்: Zoo Johor) என்பது 12.5 ஹெக்டேர் பரப்பில் மலேசியா ஜொகூரில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலை ஆகும். இங்கு 100க்கும் மேற்பட்ட விலங்கினங்கள் காணப்படுகின்றன. இவற்றுள் கொரில்லா, யானை, பூநாரை, குதிரை மற்றும் சிங்கம் போன்ற 28 விலங்கினங்கள் கண்காட்சிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.[1][2] இது ஜொகூர் பாரு நகர மையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது மலேசியாவில் மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரே உயிரியல் பூங்காவாகும்.[3]
இந்த மிருகக்காட்சிசாலை 1928ஆம் ஆண்டில் மாட்சிமை தங்கிய மன்னர் அல்மர்ஹூம் சுல்தான் சர் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் சர் அபு பக்கரால் திறக்கப்பட்டது. இதற்கு கெபுன் பினாடாங் என்று பெயரிடப்பட்டது. இந்த மலாய் சொற்றொடரின் தமிழாக்கம் விலங்கியல் தோட்டம் அல்லது மிருகக்காட்சிசாலை ஆகும். ஏப்ரல் 1, 1962-ல், மிருகக்காட்சிசாலை ஜொகூர் மாநில அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது மற்றும் அதே ஆண்டில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
போக்குவரத்து
[தொகு]மிருகக்காட்சிசாலையை அடைய முபகாத் பேருந்து வழித்தடம் பி-101 மூலம் அணுகலாம். [4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Zoo Johor". Visit Malaysia. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
- ↑ "Zoo Johor". tourism.johor.my. Tourism Johor. Archived from the original on 20 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
- ↑ Johor Zoo leaflet November 2018
- ↑ "Laluan Bas Muafakat". Bas Muafakat Johor (in Malay). Archived from the original on 17 March 2018. பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)