உள்ளடக்கத்துக்குச் செல்

ஜான் குட்ரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜான் குட்ரிக்
John Goodricke
பிறப்பு(1764-09-17)17 செப்டம்பர் 1764
குரோனிங்கன்
இறப்பு20 ஏப்ரல் 1786(1786-04-20) (அகவை 21)
வாழிடம்இங்கிலாந்து
நெதர்லாந்து
தேசியம்ஐக்கிய இராச்சியம்
துறைவானியல்
அறியப்படுவதுமாறுபடும் விண்மீன்கள் பற்றிய ஆய்வு
விருதுகள்கோப்ளி விருது (1783)

ஜான் குட்ரிக் அல்லது ஜான் குட்ரைக் (John Goodricke, 17 செப்டம்பர் 1764 – 20 ஏப்ரல் 1786) என்பவர் ஆங்கிலேய தொழில்முறையல்லா வானியலாளர் ஆவார். 1782 ஆம் ஆண்டில் ஆல்கால் என்ற மாறியல்பு விண்மீனைப் பற்றிய ஆய்வுக்காக இவர் அறியப்படுகிறார்.

ஜான் குட்ரிக் நெதர்லாந்தில் உள்ள குரோனிங்கனில் 1764 இல் பிறந்தார். இவர் காதுகேளாதவர்.[1] மாறும் விண்மீனை 200 ஆண்டுகட்கு முன்பே டேவிட் பாப்ரிசியசு கண்டுபிடித்து இருந்தாலும் அதற்கான சரியான விளக்கத்தை அளித்தவர் ஜான் குட்ரிக் தான். ஆல்கால் என்ற மாறுவிண்மீனை கவனமாக அவதானித்து விரைவான பொலிவுமாற்றத்துக்கான காரணம் பொலிவுமிக்க விண்மீனை ஒரு கரும்பொருள் சுற்றிவந்து அதை மறைப்பதுதான் என்ற முடிவுக்கு வந்தார். அதற்காக அவர் இலண்டன் அரசுக்கழக உயர்விருதான கொப்ளி விருதைப் பெற்றார். மேலும் அதில் ஆய்வாளராகவும் அமர்த்தப்பட்டார். அவர் 21 அகவை முடிவதற்குள்ளேயே (1786 இல்) காலமானார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BBC News Magazine (18 டிசம்பர் 2012). "Disability history month: John Goodricke the deaf astronomer". BBC. பார்க்கப்பட்ட நாள் 11 பெப்ரவரி 2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "John Goodricke: The Discovery of the Occultating Variable Stars". Archived from the original on 2006-06-22. பார்க்கப்பட்ட நாள் 2015-05-06.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_குட்ரிக்&oldid=3940875" இலிருந்து மீள்விக்கப்பட்டது