உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாங்கிரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாங்கிரி
இமார்தி
மாற்றுப் பெயர்கள்எமார்தி, அம்ரிதி, அமித்தீ, ஓம்ரிதி
பரிமாறப்படும் வெப்பநிலைஇனிப்பு
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
தொடர்புடைய சமையல் வகைகள்வங்காளதேசம், இந்தியா
முக்கிய சேர்பொருட்கள்உளுந்து, குங்குமப்பூ, நெய், சர்க்கரை
இதே போன்ற உணவுகள்ஜிலேபி, சாஹி, சின்ன ஜிலேபி

ஜாங்கிரி (வங்காள மொழி: অমৃতি ஆங்கிலம்:Imarti) என்பது இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு ஆகும். இது உளுந்து மாவினைக் கொண்டு வட்ட வடிவ மலர் வடிவத்தில் எண்ணெய்யில் வறுத்து, சர்க்கரை பாகில் ஊறவைத்து தயார் செய்யப்படுகிறது. அமிட்டி, அம்ரிதி, இமார்தி, எமர்தி , ஓம்ரிட்டி , ஜஹாங்கீர் மற்றும் ஜாங்கிரி என்பது இதன் வேறு பெயர்களாகும். மெல்லியதாகவும் இனிப்பானதாகவும் இருப்பதால் ஜிலேபி ஜாங்கிரியிலிருந்து வேறுபடும்.[1] ஜாங்கிரி வங்காளதேசத்தில் பிரபலமான இப்தார் உணவாகும்.[2] இப்தாரின்போது ஜாங்கிரி நிறச் சேர்க்கைப்பொருள் இல்லாமல் தயார் செய்யப்படும்.[3]

தேவையான பொருட்கள்

[தொகு]

ஜாங்கிரி என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் தமிழ்நாட்டில் ஜாங்கிரி பருப்பு அல்லது ஜாங்கிரி உளுந்து என்றும் அழைக்கப்படும் உளுந்து மாவு வகைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் குங்குமப்பூ நிறத்திற்காகச் சேர்க்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]
இந்தியாவின் கொல்கத்தாவில் ஜாங்கிரி தயாரித்தல்

உளுந்தம் பருப்பினை சில மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, கல் உரலில் மாவு பதத்திற்கு அரைத்து அரைக்கவேண்டும். இந்த மாவினை ஒரு பாத்திரத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் நெய்யில் வார்த்தெடுக்கப்பட்டு, பொறித்து எடுக்கவேண்டும். நெய்க்குப் பதிலாக எண்ணெய்களும் சில நேரங்களில் பயன்படுத்தப்படுகின்றன.இந்த மாவானது பூ வடிவில் எண்ணெய்யில் வார்த்தெடுக்கப்பட்டு தயார் செய்யப்படுகின்றன.

மாவு தயார் செய்யும்பொழுது சர்க்கரை பாகும் தயாரிக்கப்படுகிறது. சுவைக்காகவும் மனத்திற்காகவும், சர்க்கரைப் பாகில் கற்பூரம், கிராம்பு, ஏலக்காய், கேவ்ரா (மனம் தரக்கூடிய பொருள்) மற்றும் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது. பூ வடிவில் வறுத்தெடுக்கப்பட்ட மாவினை சர்க்கரை பாகில் இட்டு ஊறவிடவேண்டும். சர்க்கரை பாகினை உறிஞ்சி ஊறிய பின்னர், ஜாங்கிரியினை சூடாக, அறை வெப்பநிலையில் அல்லது குளிரூட்டப்பட்ட நிலையில் பரிமாறலாம்.

பரிமாறுதல்

[தொகு]

இந்தியாவில், இந்த இனிப்பு உணவின் போது பரிமாறப்படுகிறது. திருமணங்கள் மற்றும் திருவிழாக்களிலும் ஜாங்கிரி பிரபலமாக உள்ளது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூர் ஜாங்கிரிக்குப் பிரபலமானது.[4] இது தயிருடனும்பயன்படுத்தப்படுகிறது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Difference between Jalebi & Imarti". recipes.timesofindia.com. Times Food. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020.
  2. প্রতিবেদক, নিজস্ব. "ইফতারে ঘোষপট্টির 'ডাইলের আমিত্তি'". Prothomalo (in Bengali). பார்க்கப்பட்ட நாள் 2020-12-02.
  3. "ঐতিহ্যে সিলেটি ইফতার" (in Bengali). Sylheter Dak. 31 May 2017. Archived from the original on 5 ஜூன் 2020. பார்க்கப்பட்ட நாள் 19 April 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Keshavrao, Dhanvanti (6 July 2013). "A sweet tale of an exotic dessert". http://www.deccanherald.com/content/342897/a-sweet-tale-exotic-dessert.html. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாங்கிரி&oldid=3930404" இலிருந்து மீள்விக்கப்பட்டது