ஜலான் அருங்காட்சியகம், பாட்னா
குயிலா இல்லம் | |
நிறுவப்பட்டது | 1919 |
---|---|
அமைவிடம் | பாட்னா, பீகார், இந்தியா |
ஆள்கூற்று | 25°35′55″N 85°13′46″E / 25.598591°N 85.229547°E |
வகை | கலை மற்றும் மரபுசார் அருங்காட்சியகம் [1] |
உரிமையாளர் | பி.எம்.ஜலான், ஜி.எம்.ஜலான் மற்றும் எஸ்.எம்.ஜலான் |
வலைத்தளம் |
ஜலான் அருங்காட்சியகம், பாட்னா குயிலா இல்லம் என்றழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாட்னாவில் அமைந்துள்ள ஒரு தனியார் அருங்காட்சியகம் ஆகும். பீகார் மாநிலத்தில் உள்ள இரண்டு தனியார் அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்றாகும்.[2][3]
கண்ணோட்டம்
[தொகு]குயிலா இல்லம் என்பது வட இந்தியாவில் பீகார் மாநிலத்தில் உள்ள பழைய நகரமான பாட்னாவில் கங்கா ஆற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் குடியிருப்பு வீடாகும். 1919 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, வணிகர் மற்றும் கலை சேகரிப்பாளராக இருந்த திவான் பகதூர் ராதா கிருஷ்ணா ஜலான் (ஆர்.கே. ஜலான்) (1882–1954) என்பவரின் தனிப்பட்ட சேகரிப்புகள் கொண்ட இடமாகும். இந்த சேகரிப்புகள் அவருடைய தனிப்பட்ட சாதனை ஆகும். ஆங்கிலம் மற்றும் டச்சு பாணியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் குயிலா இல்லம் அதாவது, குயிலா ஹவுஸ் என்று அழைக்கப்படுகிறது .[4]
சுமார் 10,000 எண்ணிக்கையிலான பொருட்கள் இங்கு சேகரிப்பில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நவீன காலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன. இங்குள்ள பொள்கள் கல், உலோகம், டெர்ரகோட்டா, தந்தம், கண்ணாடி மற்றும் பீங்கான் ஆகிய பொருள்களால் ஆனவை ஆகும். இங்கு காட்சிப்படுத்தப்பட்ட கலைப் பொருட்களில், பல கலைப்பொருள்கள் ஐரோப்பிய மற்றும் சில ஆசியாவின் தொலைதூர மற்றும் கிழக்கு நாடுகளைச் சேர்ந்தவையாக அமைந்துள்ளன.[5]
கட்டிடத்தின் ஒரு பகுதியானது ஜலான் குடும்பத்தின் ஒரு தனியார் குடியிருப்பு பகுதியாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த அருங்காட்சியகம் பார்வையாளர்களுக்கு திங்கள் முதல் சனிக்கிழமை வரையுள்ள நாட்களில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரையிலும், மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.[6]
சிறப்பு
[தொகு]பீகார் மாநிலத்தின் பழைய மரபுக்கு மாற்றாக, விதிவிலக்காக இந்த குயிலா இல்லம் உள்ளது. இந்த வரலாற்று மையத்தை திவான் பகதூர் ராதா கிருஷ்ணா ஜலான் அமைத்த காலகட்டத்தில் கூடுதலாக சில கட்டட அமைப்புகளையும் நிர்மாணித்தார். இந்த இடத்தின் சிறப்பால் மிகவும் கவரப்பட்ட திவான் பகதூர் ராதா கிருஷ்ணா ஜலான் காட்சிக்கூடங்களை அமைப்பதனை தன் இலக்காகக் கொண்டிருந்தார். அதற்குஆயத்தமாக குயிலா கோட்டையின் ஒரு பகுதியை அவர் பெற்றார். நிலநடுக்கத்தின் காரணமாக இந்தக் கட்டிடத்தில் சிறிது பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் பின்னர் அது ஒரு வரலாற்று மையம் என்ற நிலைக்கு மாற்றப்பட்டது. ஜலான் அருங்காட்சியகம் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட பழங்கால அபூர்வ கலைப்பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள பொருள்கள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவையாக உள்ளன. வானிலை: கோடை 38 °C முதல் 42 °C குளிர்காலம் 19 °C முதல் 24. C வரை இப்பகுதிக்கு ஏற்றதாக உள்ளது.[7]
மேற்கண்ட பலவகையிலான பொருள்களைத் தவிர இந்த அருங்காட்சியகம் மூன்றாம் ஜார்ஜ் மன்னருக்குச் சொந்தமான, அவருக்கு உணவு வகைகள் பரிமாறப்பட்டபோது பயன்படுத்தப்பட்ட பொருள்களும் முக்கியமானவையாக காட்சிப்படுத்தப்ட்டுள்ளன. நெப்போலியனின் படுக்கையும் இங்குள்ள சிறப்பான பொருளாகும். சீனாவின் ஜாடேயும், முகலாய மன்னர்களின் வேலைப்பாடமைந்த கலைப்பொருள்களும் உள்ளன. இது ஒரு தனியார் அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகின்ற நிலையில் இவை போன்ற பொருள்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்தில் அவற்றைச் சென்று பார்ப்பதற்கு முன் அனுமதியைப் பெற வேண்டும். பாட்னாவில் பார்க்கப்படவேண்டிய 40 இடங்களில் இந்த அருங்காட்சியகம் 31ஆவது இடத்தைப் பெறுகிறது.
மேலும் காண்க
[தொகு]- பாட்னா அருங்காட்சியகம்
- பீகார் அருங்காட்சியகம்
- இந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள்
- இந்தியாவில் உள்ள அருங்காட்சியகங்களின் பட்டியல்
குறிப்புகள்
[தொகு]- ↑ "Things to Do — Jalan Museum, Patna, Bihar". Nivalink.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
- ↑ "Museums run by the Private Individuals". Directorate of Museum, Govt. of Birhar. p. 5. Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2014-01-06.
Other one being: Kumar Sangrahalay, Hasanpur, Smastipur
- ↑ Pranava K Chaudhary 20 Sep 2011, 07.30am IST (2011-09-20). "Quake damages Jalan Museum — Times Of India". The Times of India. Archived from the original on 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link) - ↑ Opening hours. "Qila House (Jalan Museum)". Lonely Planet. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
- ↑ "Jalan Museum". Patna4u.com. Archived from the original on 2014-01-10. பார்க்கப்பட்ட நாள் 2014-01-04.
- ↑ "Contact Quila House". Quila House. Archived from the original on 2013-11-02. பார்க்கப்பட்ட நாள் 2014-01-06.
- ↑ Jalan Museum