உள்ளடக்கத்துக்குச் செல்

சோழரின் வட இந்தியப் பயணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சோழரின் வட இந்தியப் பயணம் இடைக்கால் சோழ அரசன் இராசேந்திர சோழனால் 1019 க்கும் 1024 க்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்றது. சில வரலாற்றாளர்கள் இப்பயணம் கங்கையைத் தரிசிக்கச் சென்ற யாத்திரை எனவும், பலர் இது கிழக்கு இந்தியாவை பணிய வைக்க மேற்கொள்ளப்பட்ட முற்றிலுமான படை நடவடிக்கை எனக் கருதுகின்றனர். இப்பயணம் வெங்கி - கிழக்கு சாளுக்கியம், கலிங்க நாடு, ஒடிசா மற்றும் வங்காளம் ஆகிய நாடுகளைக் கடந்து இறுதியில் கங்கை வரை இடம்பெற்றது. இப்பயணத்தில் முக்கிய நிகழ்வாக பாலப் பேரரசின் அரசன் முதலாம் மகிபலவை வெற்றி கொண்டமை எனக் கருதப்படுகின்றது.

சம்பவங்கள்

[தொகு]

திருவாலங்காடு தகடுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன:

சோழ வம்சத்தின் (இராசேந்திர சோழன்) ஒளியில், ஏளனத்திற்குரிய பகிரதனின் கடுமை கங்கையின் வீழ்ச்சிக்குக் காரணமாகியது. இதனால் அவன் தன் சொந்த நிலத்தையும், தன் கையில் பலத்தினால் சிற்றோடைகளை கொண்டுவரும் நீரையும் தியாகம் செய்ய வேண்டியதாயிற்று.[1]

குறிப்புகள்

[தொகு]
  1. Sastri, p 206

புத்தக விபரம்

[தொகு]
  • Sastri, K. A. Nilakanta (2000) [1935]. The Cōlas. Madras: University of Madras.