உள்ளடக்கத்துக்குச் செல்

செரோசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செரோசியா (Gerousia, கிரேக்க மொழி: γερουσία) என்பது எசுபார்டான் மூத்தோர் அவை ஆகும். இது அறுபது வயதுக்கு மேற்பட்ட ஆடவரைக் கொண்டது. இது கிமு ஏழாம் நூற்றாண்டில் எசுபார்டான் அரசியல் அமைப்பை உருவாக்கிய லைகர்சால் உருவாக்கப்பட்டது. லைகர்கசின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய புளூட்டார்க்கின் கூற்றுப்படி, செரோசியாவின் உருவாக்கமானது லைகர்கசால் நிறுவப்பட்ட முதல் குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு கண்டுபிடிப்பு ஆகும். இந்த பழைய எசுபார்டன் பாரம்பரியம் அண்மைக் காலம் வரை "ஜெரோண்டிகோய்" என்று அழைக்கப்பட்டு வந்தது. [1]

உறுப்பினர்

[தொகு]

செரோனியா அவையானது மொத்தம் முப்பது உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. இவர்களில் இருபத்தெட்டு பேர் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும். [2] மீதமுள்ள இரண்டு உறுப்பினர்களாக இரண்டு எசுபார்டன் மன்னர்கள், இருப்பர். மன்னர்களைத் தவிர, செரோசியாவின் உறுப்பினர்கள் (செரோண்டர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்), ஆயுட்கால உறுப்பினர்களாக பணியாற்றினார்கள். [2] செரண்டெர் மக்களின் குரல் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] இதன் உறுப்பினர்களாக ஆளும் வர்கத்தைச் சேர்ந்த உயர்குடியினர் மட்டுமே இருந்தனர். [4]

செயல்பாடு

[தொகு]

ஜெரோசியா இரண்டு முக்கிய பொறுப்புகளைக் கொண்டிருந்தது. எந்தவொரு தீர்மானத்தை நிறைவேற்றப்படுவதைத் தடுக்கும் அதிகாரத்துடன், குடிமக்கள் பேரவையின் முன் வைக்கப்பட வேண்டிய தீர்மானங்களை இது விவாதித்தது. [5] மேலும் மன்னர்கள் உட்பட எந்த எசுபார்டானையும் விசாரிக்கும் உரிமையுடன் கூடிய உச்ச நீதிமன்றமாக செயல்பட்டது. [4] எசுபார்டன் சபையால் எடுக்கப்பட்ட முடிவுகளைத் தலைகீழாக மாற்றும் சக்தி இதற்கு உண்டு என்று கிரேட் ரேட்ரா கூறுகிறது. [6]

மேலும் பார்க்கவும்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரோசியா&oldid=3374998" இலிருந்து மீள்விக்கப்பட்டது