சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை
உருவாக்கம் | 1996 |
---|---|
வகை | ஆராய்ச்சி நிலையம் |
தலைமையகம் | சென்னை, இந்தியா |
தலைமையகம் |
|
நிறுவனர் | வி. மோகன் |
வலைத்தளம் | mdrf.in |
சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (எம்.டி.ஆர்.எஃப்) என்பது சென்னையின் கோபாலபுரத்தில் அமைந்துள்ள ஒரு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனமாகும். இதனை 1996இல் பிரபல நீரிழிவு நிபுணர் மருத்துவர் வி . மோகன் தோற்றுவித்தார்.[1][2]
ஆராய்ச்சி
[தொகு]சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை நீரிழிவு மற்றும் இதனுடன் தொடர்புடைய துறைகளில் அடிப்படை, மருத்துவ மற்றும் தொற்றுநோயியல் ஆராய்ச்சிகளை நடத்துகிறது. இந்த அமைப்பு பல சர்வதேச மற்றும் தேசிய மையங்களுடன் இணைந்து சக மதிப்பாய்வு செய்யப்படும் ஆய்விதழ்களில் கணிசமான எண்ணிக்கையிலான ஆராய்ச்சி மற்றும் கள ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.[3][4][5][6] இந்நிறுவனத்தினை இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபை (ஐ.சி.எம்.ஆர்) 'நீரிழிவு நோயின் மரபணு ஆராய்ச்சிக்கான மேம்பட்ட ஆராய்ச்சி மையமாக' அங்கீகரித்துள்ளது.[7][8][9]
கல்வி நடவடிக்கைகள்
[தொகு]சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் சென்னைப் பல்கலைக்கழகம் அங்கீகரித்த முனைவர் பட்டம் வழங்க வழிவகுக்கும் படிப்புகளை நடத்துகிறது.[10] நீரிழிவு பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் மருத்துவ நிபுணர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இந்த அமைப்பு அமெரிக்க நீரிழிவு சங்கத்துடன் (ஏடிஏ) இணைந்து 'நீரிழிவு நோயில் முதுகலை பட்டயப் படிப்பு' ஒன்றை வழங்கி வருகிறது.[11][12]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "::Welcome to MDRF::".
- ↑ Mohan, Viswanathan; Anbalagan, Viknesh Prabu (2013). "Expanding role of the Madras Diabetes Research Foundation - Indian Diabetes Risk Score in clinical practice". Indian Journal of Endocrinology and Metabolism 17 (1): 31–36. doi:10.4103/2230-8210.107825. பப்மெட்:23776850.
- ↑ "India". 12 August 2013.
- ↑ "Liquid-biopsy microRNA biomarkers to predict risk for diabetic kidney disease".
- ↑ "Endoplasmic reticulum stress plays significant role in type 2 diabetes".
- ↑ "COVID-19 and the need for expanding research on calcium homeostasis breakdown".
- ↑ https://main.icmr.nic.in/sites/default/files/reports/Executive%20Summary%20on%20the%20ICMR%20center%20for%20Advanced%20Research%20%28CAR%29%20in%20genomics%20of%20Diabetes.pdf
- ↑ "::Welcome to Mdrf::". mdrf.in.
- ↑ Mohan, Viswanathan (2018). "My 40-year journey in diabetes research: The power of collaboration". Perspectives in Clinical Research 9 (3): 113–122. doi:10.4103/picr.PICR_86_18. பப்மெட்:30090709.
- ↑ "::Welcome to MDRF::".
- ↑ Srivatsava, Brijendra Kumar; Balasubramanyam, M.; Mohan, V. (2003). "The MDRF- ADA post graduate course in diabetology - scientific highlights". International Journal of Diabetes in Developing Countries 23: 135–144. http://repository.ias.ac.in/80202/.
- ↑ "Announcements". Diabetes Research and Clinical Practice 57 (3): 213. 1 September 2002. doi:10.1016/S0168-8227(02)00140-7. https://archive.org/details/sim_diabetes-research-and-clinical-practice_2002-09_57_3/page/213.