உள்ளடக்கத்துக்குச் செல்

சூரஜ் தால் (ஏரி)

ஆள்கூறுகள்: 32°45′N 77°24′E / 32.750°N 77.400°E / 32.750; 77.400
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரஜ் தால்
Suraj Taal
அமைவிடம்சி.பி. மலைத்தொடர், லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்
ஆள்கூறுகள்32°45′N 77°24′E / 32.750°N 77.400°E / 32.750; 77.400
வகைஉயரமான இடத்தில் உள்ள ஏரி
முதன்மை வரத்துபனியாறு மற்றும் உருகும் பனி
முதன்மை வெளியேற்றம்பாக ஆறு
வடிநில நாடுகள்காஷ்மீர்
கரை நீளம்14 km (2.5 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,883 m (16,020.3 அடி)
உறைவுகுளிர்காலத்தின் போது
குடியேற்றங்கள்பட்சேவோ மற்றும் டார்ச்சா (Patseo and Darcha) (மலை குக்கிராமங்கள்)
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

சூரஜ் தால் (Suraj Taal) அல்லது சூர்யா தால் (Surya taal) என அறியப்படும் இந்த ஏரி, மிக தூய்மையாகவும், புனிதத்தன்மையுடனும் காணப்படுவதால் சூரிய பகவான் நன்னீர் ஏரி என்று அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அதனால் இவ்வேரிக்கு சூரிய தால் (ஏரி) எனும் பெயரில் அழைக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 4883 மீட்டர் (4 கிமீ) உயர்ந்துள்ள, உலகின் 21 உயரமான ஏரிகளில் ஒன்றான இது, இந்தியாவின் உயரமான ஏரியின் வரிசையில் 3-ம் இடத்தில் உள்ளது.[1]

பின்னணி

[தொகு]

இந்தியாவின் இமாலய பிராந்தியத்தில் லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பாரா-லசா-லா எனும் கணவாயின் (நீளம் 8 கிமீ (5.0 மைல்) கீழே அமைந்துள்ள சூரஜ் தால் ஏரி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இமாசலப் பிரதேசத்தை சார்ந்த பாகா ஆறு உருவாக ஆதாரமாகவும், செனாப் ஆற்றின் முதன்மை வரத்தாகவும் உள்ளது. பாகா ஆறு, தண்டி என்னுமிடத்தில் சந்திர ஆறோடு இணைந்து சந்திரபாகா ஆறு என்ற பெயரோடு சம்மு காசுமீர் பகுதியில் நுழைந்து செனாப் ஆறு என பெயர் மாற்றம் பெற்று பாய்கிறது.[2]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Suraj Tal – Lake of the Sun God, 3rd Highest in India". theoktravel.com (ஆங்கிலம்). Mar 3, 2013. பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்_தால்_(ஏரி)&oldid=3930130" இலிருந்து மீள்விக்கப்பட்டது