சூரஜ் தால் (ஏரி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரஜ் தால்
Suraj Taal
SuryaTaal.jpg
அமைவிடம்சி.பி. மலைத்தொடர், லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டம், இமாச்சலப் பிரதேசம்
ஆள்கூறுகள்32°45′N 77°24′E / 32.750°N 77.400°E / 32.750; 77.400ஆள்கூறுகள்: 32°45′N 77°24′E / 32.750°N 77.400°E / 32.750; 77.400
வகைஉயரமான இடத்தில் உள்ள ஏரி
முதன்மை வரத்துபனியாறு மற்றும் உருகும் பனி
முதன்மை வெளிப்போக்குபாக ஆறு
வடிநில நாடுகள்காஷ்மீர்
கரை நீளம்14 km (2.5 mi)
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,883 m (16,020.3 ft)
உறைவுகுளிர்காலத்தின் போது
Settlementsபட்சேவோ மற்றும் டார்ச்சா (Patseo and Darcha) (மலை குக்கிராமங்கள்)
1 கரை நீளம் நன்கு வரையறுக்கப்பட்ட அளவல்ல.

சூரஜ் தால் (Suraj Taal) அல்லது சூர்யா தால் (Surya taal) என அறியும் இந்த ஏரி, மிக தூய்மையாகவும், புனிதத்தன்மையுடனும் காணப்படுவதால் சூரிய பகவான் நன்னீர் ஏரி என்று அப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது. அதனாலேயே இவ்வேரிக்கு சூரிய தால் (ஏரி) எனும் பெயரில் அழைக்கப்படுவதாக அறியப்பட்டுள்ளது.[1] கடல் மட்டத்திலிருந்து சுமார் 4883 மீட்டர் (4 கிமீ) உயர்ந்துள்ள, உலகின் 21 உயரமான ஏரிகளில் ஒன்றான இது, இந்தியாவின் உயரமான ஏரியின் வரிசையில் 3-ம் இடத்தில் உள்ளது.[1]

பின்னணி[தொகு]

இந்தியாவின் இமாலய பிராந்தியத்தில் லாஹௌல் மற்றும் ஸ்பிதி மாவட்டத்தின் பாரா-லசா-லா எனும் கணவாயின் (நீளம் 8 கிமீ (5.0 மைல்) கீழே அமைந்துள்ள சூரஜ் தால் ஏரி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 4,890 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இமாசலப் பிரதேசத்தை சார்ந்த பாகா ஆறு உருவாக ஆதாரமாகவும், செனாப் ஆற்றின் முதன்மை வரத்தாகவும் உள்ளது. பாகா ஆறு, தண்டி என்னுமிடத்தில் சந்திர ஆறோடு இணைந்து சந்திரபாகா ஆறு என்ற பெயரோடு சம்மு காசுமீர் பகுதியில் நுழைந்து செனாப் ஆறு என பெயர் மாற்றம் பெற்று பாய்கிறது.[2]


சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Suraj Tal – Lake of the Sun God, 3rd Highest in India". theoktravel.com (ஆங்கிலம்) (Mar 3, 2013). பார்த்த நாள் 1 சூலை 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரஜ்_தால்_(ஏரி)&oldid=3337944" இருந்து மீள்விக்கப்பட்டது