சுவராஜ் வித்வான்
சுவராஜ் வித்வான் | |
---|---|
தேசியம் | இந்தியர் |
சுவராஜ் வித்வான் (Swaraj Vidwan) இந்தியாவைச் சேர்ந்த சமூக சேவகரும், சிறுபான்மை இனத்தவர்களுக்கான ஆர்வலரும் ஆவார். இவர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் உறுப்பினராக இருக்கிறார். பாதிக்கப்பட்ட மற்றும் ஓதுக்கப்பட்ட குழுக்களுடன் பணியாற்றியதற்காக இவருக்கு இந்திய அரசு நாரி சக்தி விருது வழங்கியது.
வாழ்க்கை
[தொகு]இவர் பாதிக்கப்பட்ட மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களுடன் பணிபுரிகிறார். 2000 ஆம் ஆண்டில் இவர் உத்தரகாசியில் தனது வேலையைத் தொடங்கினார். [1] உறுப்பினர்களை மேம்படுத்துவதற்காக 100க்கும் மேற்பட்ட சுய உதவிக்குழுக்களை அமைத்தார். மேலும் 160 ஏழைப் பெண்களின் திருமணத்திற்கான நிதியுதவியையும் ஏற்பாடு செய்தார். இவர் 1200 பெண்களுக்கு ஓய்வூதியம் வெறுவதற்கும், மேலும் 500 பெண்களுக்கு சுயதொழில் செய்வதற்கான நிதியையும் ஏற்பாடு செய்தார். பள்ளியில் சேர சிரமப்பட்ட 800 சிறுமிகளுக்கு பள்ளி புத்தகங்களையும், பள்ளிச் சீருடையும் பெற இவர் மூலம் பணம் கிடைத்தது.
கோமுகம் பகுதியில் ஏற்பட்ட ஒரு பனிப்பாறையை 120 பேரைக் கொண்டு சுத்தம் செய்து சுற்றுச்சூழலை மேம்படுத்த இவர் ஏற்பாடு செய்தார். 2013 வட இந்தியா வெள்ளத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ஏற்பாடு செய்ய உதவினார். [1]
2015 இல் அனைத்துலக பெண்கள் தினத்தன்று இவருக்கு நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [2] இவருடன் சேர்ந்து எட்டு பெண்களுக்கு இதேபோல் நாரி சக்தி விருது வழங்கப்பட்டது. [3] அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை வழங்கினார். [4]
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வித்வான் உதவி வருகிறார். [5] குறிப்பாக பாதிக்கப்பட்ட பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வழக்குகளை காவல்துறையினர் புறக்கணிப்பதாக இவர் சந்தேகிக்கிறார். [6] 2018 ஆம் ஆண்டில் இவரும், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையமும் சேர்ந்து 16 வயதுகுட்பட்ட பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான ஒரு பெண் சார்பாக புகார் அளித்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர் காவலில் இருக்கும்போது இறந்தார். அந்த நபரின் மரணம் உண்மையான குற்றவாளிகளை மறைத்துவிடக்கூடும் என்று இவர் சந்தேகித்தார். [7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Citation by the Ministry of WCD". Twitter (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ Verma, Manish. Current Affairs Manual 2016 (in ஆங்கிலம்).
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Nari Shakti Puraskar awardees full list". Best Current Affairs. 9 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ Kaundal, Roop Lal. "Swaraj Vidwan Questions HP Women Commissions Silence Over Blind Girl Rape – Hill Post" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ "Schedule Caste victims get raw deal from Pune Police, says panel; top cop denies charges". The Indian Express (in ஆங்கிலம்). 2017-08-24. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.
- ↑ "Shimla Schoolgirl Case: NCSC Reprimands Police For 'Trying To Hush' Issue". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-07-04.