சீன சீர்தர நேரம்
சீன சீர்தர நேரம் சீனாவில் உள்ள ஒற்றை சீர்தர நேரத்தைக் குறிக்கிறது; சீனா ஐந்து புவியியல் நேர வலயங்களில் பரந்திருப்பினும் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திற்கு எட்டு மணிநேரம் முன்னதாக உள்ள ஒ.ச.நே + 08:00 கடைபிடிக்கின்றது. இந்த அலுவல்முறை தேசிய சீர்தர நேரம் உள்ளூரில் பெய்ஜிங் நேரம் (எளிய சீனம்: 北京时间) என்றும் [1] பன்னாட்டளவில் சீன சீர்தர நேரம் (CST) என்றும் அறியப்படுகின்றது.[2] 1991 முதல் பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படுவதில்லை.[3]
சிறப்பு நிர்வாகப் பகுதிகள் தங்களுக்கான நேரக் கட்டுப்பாட்டு ஆணயங்களை கொண்டுள்ளன. இவை ஆங்காங் நேரம் (香港時間) என்றும் மக்காவு சீர்தர நேரம் (澳門標準時間) என்றும் அறியப்படுகின்றன. 1992 முதல் இவை பெய்ஜிங் நேரத்திற்கு இணையானவையாக கருதப்படுகின்றன.
ஒரே நேர வலயமாக ஒ.ச.நே + 08:00 உள்ளதால், மேற்கிலுள்ள சிஞ்சியாங்கில் குளிர்காலத்தில் கதிரவன் எழுச்சி காலை பத்து மணிக்கும் கோடை காலத்தில் கதிர் மறைவு நள்ளிரவிலும் நிகழ்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "时间的概念". 国家授时中心科普网站. Archived from the original on 2012-10-16.
- ↑ "CST – China Standard Time (Time Zone Abbreviation)". timeanddate.com.
- ↑ timeanddate.com, Daylight Saving Time in China