கடவுச்சொல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:கணினியியல் சேர்க்கப்பட்டது using HotCat
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''''கடவுச் சொல்''''' (''Password'') எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அநுமதி அளிக்கும் இரகசியச் சொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.
'''''கடவுச் சொல்''''' (''Password'') எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அனுமதி அளிக்கும் இரகசியச் சொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.


== பயன்படும் சாதனங்கள் ==
== பயன்படும் சாதனங்கள் ==

05:02, 20 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம்

கடவுச் சொல் (Password) எனப்படுவது இடம் அல்லது தகவலுக்கு அணுக்க அனுமதி அளிக்கும் இரகசியச் சொல்லாகும். பொதுவாக ஒரு பயனர் பெயர் அல்லது பயனர் எண்ணுடன் இணைந்து இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. கடவுச் சொற்கள் எண், எழுத்து, குறியீடுகள் என்பனவற்றை உள்ளடக்கி இருக்கலாம்.

பயன்படும் சாதனங்கள்

கடவுச் சொல்லானது இயங்குதளங்கள், அலைபேசிகள், தன்னியக்கக் காசளிப்பு இயந்திரங்கள் போன்ற சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன. இணையத்தில் மின்னஞ்சல் சேவை, சமூக வலைத் தளங்கள் போன்றவற்றுள் உள்நுழைவதற்கு, பயனர் பெயரும் கடவுச் சொல்லும் அவசியமாகும்.

பாதுகாப்பு

கடவுச் சொல்லானது பாதுகாப்பானதாகவும் நினைவுபடுத்தக் கூடியதாகவும் அமைக்கப்பட்டிருத்தல் நன்று. வலுவான கடவுச் சொற்களை உருவாக்குவதற்கு அவை நீளமானதாக இருத்தல் வேண்டும். எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட வரியுருக்களைக் கடவுச் சொல் கொண்டிருத்தல் பாதுகாப்பானதாகும்.[1]அதே போல, கடவுச் சொல்லானது எழுத்துக்கள், குறியீடுகள், இலக்கங்கள் என்பனவற்றைக் கொண்டிருத்தல், கடவுச் சொற்களை குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றி அமைத்தல், ஒவ்வொரு கணக்குக்கும் வேறு வேறு கடவுச் சொற்களைப் பயன்படுத்தல் என்பனவற்றின் மூலம் உங்களது கடவுச் சொல்லின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

தவிர்க்க வேண்டியவை

அகரமுதலிகளில் (எந்த மொழியிலாயினும்) உள்ள சொற்களைப் பயன்படுத்தல், பின் புறமிருந்து அகரமுதலிகளில் உள்ள சொற்களை எழுதுதல், சொற்களை எழுதும்போது பொதுவாக விடப்படும் தவறுகள், பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்கக் குறியீடுகள், தொடரிகள் அல்லது தொடர்ந்து வரும் வரியுருக்கள் என்பனவற்றைப் பயன்படுத்தல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.[2]

உசாத்துணைகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடவுச்சொல்&oldid=957155" இலிருந்து மீள்விக்கப்பட்டது