யூனோ (விண்கலம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prash (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி r2.7.1+) (தானியங்கிஇணைப்பு: he:ג'ונו (חללית)
வரிசை 68: வரிசை 68:
[[fi:Juno (luotain)]]
[[fi:Juno (luotain)]]
[[fr:Juno (sonde spatiale)]]
[[fr:Juno (sonde spatiale)]]
[[he:ג'ונו (חללית)]]
[[hi:जूनो (अंतरिक्ष यान)]]
[[hi:जूनो (अंतरिक्ष यान)]]
[[hr:Juno (svemirska letjelica)]]
[[hr:Juno (svemirska letjelica)]]

06:21, 8 ஆகத்து 2011 இல் நிலவும் திருத்தம்

ஜூனோ
Juno
வியாழன் கோளில் ஜூனோ
வியாழக் கிரகத்தில் ஜூனோ உள்ள காட்சி ஓவியரின் கைவண்ணத்தில்.
இயக்குபவர்நாசா
முதன்மை ஒப்பந்தக்காரர்லொக்ஹீட் மார்ட்டின் கோர்ப்பரேசன்
திட்ட வகைவிண்சுற்றுக் கலன்
அணுகிய விண்பொருள்பூமி
செயற்கைக்கோள்வியாழன்
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள்ஆகத்து 2016[1]
சுற்றுப்பாதைகள்33
ஏவப்பட்ட நாள்ஆகத்து 5, 2011 (2011-08-05)[1]
ஏவுகலம்அட்லஸ் வி 551
ஏவு தளம்கேப் கேனவரல், புளோரிடா
திட்டக் காலம்6 பூமி ஆண்டுகள்
தே.வி.அ.த.மை எண்JUNO
இணைய தளம்www.nasa.gov/juno
நிறை3625 கிகி[1]
சுற்றுப்பாதை உறுப்புகள்
வான்வெளி கோளப்பாதைமுனைவு
அண்மைநிலை4,300 கிமீ

ஜூனோ (Juno) என்பது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் வியாழன் கோளுக்கான ஒரு விண்வெளித் திட்டம். இவ்விண்கலத்திட்டம் ஆரம்பத்தில் 2009 ஜூன் மாதத்தில் ஏவுவதற்காக 700 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் திட்டமிடப்பட்டது. ஆனாலும், நாசாவின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையினால் ஆகத்து 2011 இற்குப் பின்போடப்பட்டது. தற்போது இதன் மொத்தச் செலவீனம் $1.1 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது[2]. ஜூனோ விண்கலம் 2011 ஆகத்து 5 ஆம் நாள் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 12:25 மணிக்கு ஏவப்பட்டது[3].

ஜூனோ விண்கலம் செவ்வாய்க் கோளைத் தாண்டி வியாழனின் சுற்று வட்டத்தை ஆகத்து 2016 இல் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வியாழனின் முனைவுச் சுற்று வட்டத்திற்கு இது சென்று அங்கிருந்து அக்கோளின் பொதிவுகள், ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், வியாழனின் காந்தக்கோளம் போன்றவற்றை ஆராயும். அத்துடன், வியாழன் எவ்வாறு தோன்றியது, பாறைகளை அது கொண்டுள்ளதா, அங்குள்ள நீரின் அளவு, கோளில் அதன் திணிவுப் பரம்பல் போன்றவற்றையும் ஆராயும். வியாழனுக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்திச் செல்ல விருக்கும் முதலாவது விண்கலம் இதுவாகும்.

நாசாவின் நியூ ஃபுரொண்டியர்ஸ் வகைத் திட்டத்தில் ஜூனோ இரண்டாவது விண்கலம் ஆகும். முதலாவது விண்கலம் நியூ ஹரைசன்ஸ் 2006 ஆம் ஆண்டில் புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது. இது புளூட்டோவை 2015 இல் அடையும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Juno Mission to Jupiter" (PDF). NASA. 04/09. p. 2. பார்க்கப்பட்ட நாள் April 05, 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. Cureton, Emily Jo (June 9, 2011). "Scientist with area ties to study Jupiter up close and personal". Big Bend Now. பார்க்கப்பட்ட நாள் 17 July 2011.
  3. [1]

வெளி இணைப்புகள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜூனோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனோ_(விண்கலம்)&oldid=838911" இலிருந்து மீள்விக்கப்பட்டது