யூனோ (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யூனோ
Juno
யூனோ ஓவியரின் கைவண்ணத்தில்
திட்ட வகைவியாழக் கோள்சுற்று
இயக்குபவர்நாசா / ஜெ.பி.எல்
காஸ்பார் குறியீடு2011-040A
சாட்காட் இல.37773
இணையதளம்
திட்டக் காலம்திட்டம்: 7 ஆண்டுகள்
முடிந்தது: 12 ஆண்டு-கள், 8 மாதம்-கள், 1 நாள்

கலம்: 4 ஆண்டு-கள், 10 மாதம்-கள், 29 நாள்-கள்
அறிவியல் பிரிவு: 4 ஆண்டுகள் (2025 செப்டம்பர் வரை நீடிப்பு)
விண்கலத்தின் பண்புகள்
தயாரிப்புலாக்கீடு மார்ட்டின்
ஏவல் திணிவு3,625 kg (7,992 lb) [1]
உலர் நிறை1,593 kg (3,512 lb) [2]
பரிமாணங்கள்20.1 × 4.6 m (66 × 15 அடி) [2]
திறன்14 kW பூமியில்,[2] 435 W வியாழனில் [1]
2 × 55-ஆம்பியர்-மணி இலித்தியம்-அயனி மின்கலங்கள்[2]
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்5 ஆகத்து 2011, 16:25:00 ஒசநே
ஏவுகலன்அட்லசு V 551 (AV-029)
ஏவலிடம்கேப் கேனவரல்
ஒப்பந்தக்காரர்United Launch Alliance
புவி-ஐ அணுகல்
மிகக்கிட்டவான அணுகல்9 அக்டோபர் 2013
தூரம்559 km (347 mi)
வியாழன் சுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்5 சூலை 2016, 03:53:00 UTC [3]
7 ஆண்டு-கள், 9 மாதம்-கள், 2 நாள்-கள் ago
Orbits76 (திட்டம்) [4][5]

யூனோ திட்ட ஒட்டு
புதிய புரொன்டியர்சு திட்டம்
← நியூ ஹரைசன்ஸ் ஒசைரிசு-ரெக்சு

யூனோ (Juno; ஜூனோ) என்பது அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் வியாழனைச் சுற்றிவரும் ஒரு விண்ணுளவி ஆகும். உரோமைத் தொன்மவியலின் படி, கடவுள்களின் அரசியான யூனோ என்ற பெயர் இவ்விண்கலத்திற்கு சூட்டப்பட்டது. இவ்விண்கலம் கேனவரல் முனையில் இருந்து 2011 ஆகத்து 5-ஆம் நாள் ஏவப்பட்டது.[6] யூனோ வியாழக் கோளின் துருவப் பாதையில் 2016 சூலை 5 இல் இணைந்தது.[4][7][8] இதன் திட்டம் நிறைவடைந்தவுடன், யூனோ வியாழனின் வளிமண்டலத்தில் விடப்படும்.யூனோவின் [8]

யூனோவின் திட்டம் வியாழனின் அமைப்பு, ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், மற்றும் முனைவுக் காந்தக்கோளம் ஆகியவற்றை அளவிடுதலாகும். அத்துடன், இது வியாழன் எவ்வாறு தோன்றியது, அதற்கு பாறை வடிவ உட்பகுதி உள்ளதா, அதன் வளிமண்டலத்தில் எவ்வளவு நீர் உள்ளது, திணிவுப் பங்கீடு, 620 கிமீ/மணி வரை செல்லும் காற்று போன்றவற்றையும் ஆராயும்.[9]

1995 முதல் 2003 வரை வியாழனைச் சுற்றிவந்த அணுவாற்றலுடன் கூடிய கலிலியோ விண்கலத்திற்குப் பின்னர், வியாழனைச் சுற்றி வந்த இரண்டாவது விண்கலம் யூனோ ஆகும்.[8] வெளிக்கோள்களை நோக்கிச் செலுத்தப்பட்ட ஏனைய விண்கலங்களைப் போலல்லாமல்,[8] யூனோ சூரியவொளித் தகடுகள் மூலம் இயக்கப்படுகிறது. இவ்வொளித் தகடுகள் பொதுவாக பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[10]

நோக்கம்[தொகு]

யூனோ விண்கலம் தன் பாதையில் 30 நாட்களில் அதன் போக்கை காட்டும் படம்.

வியாழனின் முனைவுச் சுற்று வட்டத்திற்கு இது சென்று அங்கிருந்து அக்கோளின் பொதிவுகள், ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், வியாழனின் காந்தக்கோளம் போன்றவற்றை ஆராயும். அத்துடன், வியாழன் எவ்வாறு தோன்றியது, பாறைகளை அது கொண்டுள்ளதா, அங்குள்ள நீரின் அளவு, கோளில் அதன் திணிவுப் பரம்பல் போன்றவற்றையும் ஆராயும். வியாழனுக்கு சூரிய ஆற்றலைப் பயன்படுத்திச் செல்ல விருக்கும் முதலாவது விண்கலம் இதுவாகும்.

செலவு[தொகு]

இவ்விண்கலத்திட்டம் ஆரம்பத்தில் 2009 சூன் மாதத்தில் ஏவுவதற்காக 700 மில்லியன் அமெரிக்க வெள்ளி செலவில் திட்டமிடப்பட்டது. ஆனாலும், நாசாவின் வரவு-செலவுத் திட்டத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையினால் ஆகத்து 2011 இற்குப் பின்போடப்பட்டது. தற்போது இதன் மொத்தச் செலவீனம் $1.1 பில்லியன் ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.[11]

வியாழன் கோளை அடைந்த விண்கலம்[தொகு]

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வியாழன் கிரகத்தை ஆராய அனுப்பிய ஜுனோ விண்கலன் வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் 2016 ஆம் ஆண்டு சூலை மாதம் இணைந்தது.

வியாழனை நோக்கிப் பயணித்த அந்த கலன், சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கோளான வியாழனின் ஈர்ப்பாற்றல் மண்டலத்தால் பிடிக்கப்பட ஏதுவாக, தனது இயந்திரத்தை 35 நிமிடங்கள் வரை இயக்கி, தனது வேகத்தைக் குறைத்துக்கொண்டது. அதன் பின் அது வியாழனின் ஈர்ப்பாற்றலால் கவரப்ப்பெற்று, அதன் சுற்றுவட்டப் பாதையில் இணைந்தது.

ஏறக்குறைய 800 மில்லியன் கிமீ தொலைவில் இந்த சாதனை நடந்ததைக் காட்டும் ஒலிக் குறிப்பலைகளை யூனோ பூமிக்கு அனுப்பியது. [12].

நாசாவின் நியூ ஃபுரொண்டியர்சு வகைத் திட்டத்தில் யூனோ இரண்டாவது விண்கலம் ஆகும். முதலாவது விண்கலம் நியூ ஹரைசன்ஸ் 2006 ஆம் ஆண்டில் புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்டது. இது புளூட்டோவை 2015 இல் அடைந்தது.[13]

கலிலியோ தகடும் இலேகோ உருவப் பொம்மைகளும்[தொகு]

கலீலியோ தகடு

கலிலியோ கலிலியின் நினைவாக யூனோ அவரது கையினால் எழுதப்பட்ட தகடொன்றை வியாழனுக்கு சுமந்து செல்கிறது. இது இத்தாலிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் வழங்கப்பட்டதாகும். கலிலியோ கலிலியின் உருவத்துடன் 1610ல் அவரது கைப்பட எழுதப்பட்ட வாசகத்தையும் இது கொண்டுள்ளது..[14]

அத்துடன் யூனோ மூன்று லெகோ உருவ பொம்மைகளையும் சுமந்து செல்கிறது. அவை கலிலியோ, உரோமக் கடவுளர்களாகக் கருதப்படும் வியாழனும் (சூப்பிட்டர்) அவரது மனைவியுமான ஜுனோ. உரோமப் புராணப்படி, உரோமக் கடவுளான வியாழன் தனது தவறுகளை மறைப்பதற்காக தன்னைச் சுற்றி மேகங்களால் மறைப்பொன்றை ஏற்படுத்தினான். வியாழனின் மனைவி யூனோ, மேகங்களினூடாக உற்று நோக்கி அவனது உண்மையான தோற்றத்தை வெளிப்படுத்தினாள் என்று கூறப்படுகிறது. யூனோ பொம்மை உண்மையை துலக்குவதற்காக உருப்பெருக்கி கண்ணாடி ஒன்றையும், வியாழன் மின்னல் வேலையும், கலிலியோ பொம்மை அவரது தொலைநோக்கிக் கருவியையும்உ கொண்டுள்ளன.[15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Juno Mission to Jupiter" (PDF). NASA FACTS. NASA. April 2009. p. 1. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் April 5, 2011. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  2. 2.0 2.1 2.2 2.3 "Jupiter Orbit Insertion Press Kit" (PDF). NASA. 2016. Archived (PDF) from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் July 7, 2016. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  3. Foust, Jeff (July 5, 2016). "Juno enters orbit around Jupiter". SpaceNews இம் மூலத்தில் இருந்து 10 June 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210610184020/https://spacenews.com/juno-enters-orbit-around-jupiter/. 
  4. 4.0 4.1 Chang, Kenneth (July 5, 2016). "NASA's Juno Spacecraft Enters Jupiter's Orbit". The New York Times இம் மூலத்தில் இருந்து 2 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190502211501/https://www.nytimes.com/2016/07/05/science/juno-enters-jupiters-orbit-capping-5-year-voyage.html. 
  5. Greicius, Tony (September 21, 2015). "Juno – Mission Overview". NASA. Archived from the original on 25 December 2018. பார்க்கப்பட்ட நாள் October 2, 2015. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  6. Dunn, Marcia (August 5, 2011). "NASA probe blasts off for Jupiter after launch-pad snags". NBC News இம் மூலத்தில் இருந்து 14 September 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190914050008/http://www.nbcnews.com/id/44034674. 
  7. Chang, Kenneth (June 28, 2016). "NASA's Juno Spacecraft Will Soon Be in Jupiter's Grip". The New York Times இம் மூலத்தில் இருந்து 14 August 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180814155752/https://www.nytimes.com/2016/06/28/science/nasa-jupiter-juno.html. 
  8. 8.0 8.1 8.2 8.3 Riskin, Dan (July 4, 2016). Mission Jupiter (Television documentary). Science Channel.
  9. Cheng, Andrew; Buckley, Mike; Steigerwald, Bill (May 21, 2008). "Winds in Jupiter's Little Red Spot Almost Twice as Fast as Strongest Hurricane". NASA. Archived from the original on 13 May 2017. பார்க்கப்பட்ட நாள் August 9, 2017. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  10. "Juno's Solar Cells Ready to Light Up Jupiter Mission". NASA. July 15, 2011. Archived from the original on 16 February 2017. பார்க்கப்பட்ட நாள் October 4, 2015. இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
  11. Cureton, Emily Jo (June 9, 2011). "Scientist with area ties to study Jupiter up close and personal". Big Bend Now. Archived from the original on 25 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 July 2011.
  12. "வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது யூனோ". பிபிசி தமிழ். 5 சூலை 2016. பார்க்கப்பட்ட நாள் 5 சூலை 2016.
  13. Brown, Dwayne; Cantillo, Laurie; Buckley, Mike; Stotoff, Maria (July 14, 2015). "15-149 NASA's Three-Billion-Mile Journey to Pluto Reaches Historic Encounter". NASA. Archived from the original on June 17, 2019. பார்க்கப்பட்ட நாள் July 14, 2015.
  14. "Juno Jupiter Mission to Carry Plaque Dedicated to Galileo". நாசா. ஆகத்து 3, 2011. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 5, 2011.
  15. "Juno Spacecraft to Carry Three Lego minifigures to Jupiter Orbit". நாசா. ஆகத்து 3, 2011. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 5, 2011.
  16. Peter Pachal (ஆகத்து 5, 2011). "Jupiter Probe Successfully Launches With Lego On Board". PC Magazine. http://www.pcmag.com/article2/0,2817,2390527,00.asp. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஜூனோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூனோ_(விண்கலம்)&oldid=3569342" இலிருந்து மீள்விக்கப்பட்டது