சங்ககாலச் சேரர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 9: வரிசை 9:
|align="center"| [[சங்ககாலப் பாண்டியர்|பாண்டியர்]]
|align="center"| [[சங்ககாலப் பாண்டியர்|பாண்டியர்]]
|-
|-
|align="center"| [[நங்ககால வள்ளல்கள்|வள்ளல்கள்]]
|align="center"| [[சங்ககால வள்ளல்கள்|வள்ளல்கள்]]
|-
|-
|align="center"| [[சங்க கால அரசர்கள்|அரசர்கள்]]
|align="center"| [[சங்க கால அரசர்கள்|அரசர்கள்]]
|-
|align="center"| [[சங்க காலப் புலவர்கள் | புலவர்கள்]]
|-
|-
| colspan=2 align=right style="padding: 0 5px 0 5px" | <small class="editlink noprint plainlinksneverexpand">[{{SERVER}}{{localurl:வார்ப்புரு:சங்ககால வரலாறு|action=edit}} edit ]</small>
| colspan=2 align=right style="padding: 0 5px 0 5px" | <small class="editlink noprint plainlinksneverexpand">[{{SERVER}}{{localurl:வார்ப்புரு:சங்ககால வரலாறு|action=edit}} edit ]</small>

05:21, 26 சூன் 2011 இல் நிலவும் திருத்தம்

சங்ககால வரலாறு
சேரர்
சோழர்
பாண்டியர்
வள்ளல்கள்
அரசர்கள்
புலவர்கள்
edit

தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.[1]

கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும் சொல்லால் தொன்றுதொட்டு வழங்கப்பட்டு வந்தது. நீர்சூழ்ந்த கடலும் நிலமும் சேருமிடத்தைத் தமிழர் சேர்ப்பு என்றனர். சேரநாட்டின் பெரும்பகுதி சேர்ப்புநிலம். சோழநாட்டிலும், பாண்டியநாட்டிலும் சேர்ப்புப்பகுதி இருந்தாலும் இவற்றில் உள்நாட்டுப்பகுதி அதிகம்.

சேரநாட்டை ஆண்ட மன்னர்கள் அனைவரும் 'சேரமான்' என்னும் அடைமொழியில் தொடங்கும் பெயருடன் குறிப்பிடப்படுகின்றனர். எளிய ஒப்புநோக்குத் தெளிவுக்காக 'சேரமான்' என்னும் சொல் சேர்க்கப்படாமல் பெயர்கள் இங்குக் குறிப்பிடப்படுகின்றன. ஒப்புநோக்க உதவும் வகையில் குடிப்பெயர்களின் பெயர்வரிசையில் அரசர் பெயர்கள் அகரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. அரசர் பெயரை அடுத்து அவர்கள் பாடப்பட்டுள்ள புறநானூற்றுப் பாடல்-வரிசை எண்ணும் தரப்பட்டுள்ளது.

இந்தத் தொகுப்பில் உள்ள சேர அரசர்கள் புறநானூற்றுப் பாடல்களில் வருபவர்கள். பதிற்றுப்பத்து நூலில் குறிப்பிடப்படும் சேர அரச பரம்பரையில் காலநிரல் தெரிகிறது. எனவே அவர்கள் காலநிரல் வரிசையிலேயே காட்டப்படுகின்றனர்.

பதிற்றுப்பத்து காட்டும் சேரர்

பத்து பெயர் இறுதி குடிப்பெயர் பெயர் உறவு
1 ஆதன் சேரல் (உதியஞ்சேரல், சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்) எனக் கருதப்படுகிறது -
2 ஆதன் சேரல், குடக்கோ குடக்கோ நெடுஞ்சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தலைவன் 1-ன் மகன்
3 - குட்டுவன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் தலைவன் 2-ன் தம்பி
4 - சேரல் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் தலைவன் 2-ன் மகன்
5 - குட்டுவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன், சேரன் செங்குட்டுவன் தலைவன் 2-ன் மகன்
6 ஆதன் சேரல் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தலைவன் 2-ன் மகன்
7 ஆதன் கடுங்கோ செல்வக்கடுங்கோ வாழியாதன் அந்துவன் மகன்
8 பொறை சேரல், குட்டுவன் பெருஞ்சேரல் இரும்பொறை, குட்டுவன் இரும்பொறை தலைவன் 7-ன் மகன்
9 பொறை சேரல் இளஞ்சேரல் இரும்பொறை தலைவன் 8-ன் மகன்

புறநானூறு காட்டும் சேரர்

  1. ஆதன் – கடுங்கோ – செல்வக்கடுங்கோ வாழியாதன் - 14
  2. ஆதன் – கடுங்கோ வாழியாதன் - 8
  3. ஆதன் – குடக்கோ நெடுஞ்சேரலாதன் – 368
  4. ஆதன் – சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் - 387
  5. ஆதன் - சேரலாதன் - பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் - 2
  6. கடுங்கோ - பாலைபாடிய பெருங்கடுங்கோ - 11
  7. குட்டுவன் – கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் - 369
  8. கோதை – குட்டுவன் கோதை - 54
  9. கோதை - கோக்கோதை மார்பன் – 48, 49,
  10. கோதை – கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை - 245
  11. சேரமான் – பாமுள்ளூர் அரசன் - 203
  12. பொறை - அந்துவஞ்சேரல் இரும்பொறை - 13
  13. பொறை - இரும்பொறை - கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை - 5
  14. பொறை – இரும்பொறை - சேரல் - குடக்கோச்சேரல் இரும்பொறை – 210, 211
  15. பொறை – சேரல் - யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை – 20, 22, 229,
  16. பொறை - தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை - 50
  17. பொறை - மாந்தரஞ்ஞேரல் இரும்பொறை - 53
  18. வஞ்சன் - 398

சேரன்-புலவர்

  1. சேரமான் கணைக்கால் இரும்பொறை - 74
  2. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ - 282

சேர்த்தாளிகள்

  1. மாரிவெண்கோ + கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி + இராச்சூயம் வேட்ட பெருநற்கிள்ளி (ஒருங்கிருந்தாரை ஔவையார் – 367)
  2. அந்துவஞ்சேரல் இரும்பொறை + முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி (கருவூரில் மதயானை) -13

பகையாளிகள்

  1. குடக்கோ நெடுச்சேரலாதன் + வேல்பஃறடக்கைப் பெருநற்கிள்ளி (போர்ப்புறம் போரில் வீழ்ந்த குடக்கோ ஆரங்கழுத்துடன் கிடந்தது) -368, 62, 63,
  2. சேரமான் பெருஞ்சேரலாதன் சோழன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண் நாணி வடக்கிருந்தான் – 65
  3. சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு திருப்போர்ப்புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையில் கிடந்து, தண்ணீர் தா என்று பெறாது, பெயர்த்துப் பெற்று, கைக்கொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு – 74
  4. மாந்தரஞ்சேரல் இரும்பொறை சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியோடு பொருது தோற்றபோது தேர்வன்மலையன் தன் பக்கம் இருந்திருந்தால் வென்றிருக்காம் எனல் – 125
  5. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் சிறையிலிருந்து யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இருப்பொறை தன்னை விடுவித்துக்கொண்டு வலிதிற்போய் அரியணை ஏறினான்.

பிற சங்கப்பாடல்களில் சேரர்

அடிக்குறிப்பு

  1. சிறுபாணாற்றுப்படை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்ககாலச்_சேரர்&oldid=802665" இலிருந்து மீள்விக்கப்பட்டது