மூலக்கூற்று உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: '''மூலக்கூற்று உயிரியல்''' என்பது, மூலக்கூற்று மட்டத்திலான [[உய...
(வேறுபாடு ஏதுமில்லை)

19:32, 20 அக்டோபர் 2009 இல் நிலவும் திருத்தம்

மூலக்கூற்று உயிரியல் என்பது, மூலக்கூற்று மட்டத்திலான உயிரியல் குறித்த ஆய்வு ஆகும். இத்துறை, உயிரியல், வேதியியல் போன்ற துறைகளின் பிற பகுதிகளுடன், குறிப்பாக மரபியல், உயிர்வேதியியல் போன்ற துறைகளுடன் பொது ஆய்வுப் பரப்பைக் கொண்டுள்ளது. மூலக்கூற்று உயிரியல், பெரும்பாலும், பல்வேறு கல முறைமைகளுக்கு இடையேயான இடைவினைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்துகின்றது. இது, டி.என்.ஏ, ஆர்.என்.ஏ மற்றும் புரத உயிரியல் தொகுப்பு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்புகளுடன், இத்தொடர்புகள் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன என்பதை அறிந்துகொள்வதையும் உள்ளடக்குகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலக்கூற்று_உயிரியல்&oldid=440651" இலிருந்து மீள்விக்கப்பட்டது