வி. ச. பாண்டே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"V. C. Pande" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
(வேறுபாடு ஏதுமில்லை)

12:52, 26 அக்டோபர் 2021 இல் நிலவும் திருத்தம்

வினோத் சந்திர பாண்டே (16 பிப்ரவரி 1932 - 7 பிப்ரவரி 2005) என்பவர் ராஜஸ்தான் பிரிவு இந்தியக் குடிமைப்பணி ஊழியர் ஆவார். இவர் 1989-1990-ல் அமைச்சரவை செயலாளராக இருந்தார்.

அமைச்சரவை செயலாளர்களாகப் பணியாற்றிய பி. டி. பாண்டே மற்றும் கமல் பாண்டே குடும்பத்தில் வினோத் சந்திர பாண்டே பிறந்தார்.

இவர் 23 திசம்பர் 1989 முதல் 11 திசம்பர் 1990 வரை பிரதம மந்திரி வி. பி. சிங்கின் அமைச்சரவைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங் முன்னர் நிதி அமைச்சராக இருந்தபோது வருவாய்த் துறைச் செயலாளராக இருந்தார். வி. பி. சிங்கும் வினோத் சந்திர பாண்டேயும் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.

பாண்டே பீகார் (1999-2003), ஜார்கண்ட் (2002-ல் குறுகிய காலம்), மற்றும் அருணாச்சலப் பிரதேசம் (2003-04) ஆகியவற்றின் ஆளுநராக அடல் பிகாரி வாச்பாய் அரசாங்கத்தின் நியமனத்தால் பணியாற்றினார்.

திருமணம் முடிக்காமலிருந்த இவர், இந்தி, பாலி, சமசுகிருதம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இந்தியில் சிறந்த எழுத்தாளராகவும் இருந்தார். அருணாச்சலப் பிரதேசத்தின் ஆளுநர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றபின் இரண்டு மாதம் கழித்து, உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் இவர் இறந்தார்.

அரசு பதவிகள்
முன்னர்
{{{before}}}
{{{title}}} பின்னர்
{{{after}}}
முன்னர்
{{{before}}}
{{{title}}} பின்னர்
{{{after}}}
முன்னர்
{{{before}}}
{{{title}}} பின்னர்
{{{after}}}

மேலும் படிக்க

"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._ச._பாண்டே&oldid=3304648" இலிருந்து மீள்விக்கப்பட்டது