தசுக்கு ஓஞ்சோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Infobox scientist
{{Infobox scientist
| name = தசுக்கோ ஃகோஞ்சோ (
Tasuku Honjo
| name = தசுக்கோ ஃகோஞ்சோ
(Tasuku Honjo)
| native_name = 本庶 佑
| native_name = 本庶 佑
| native_name_lang = ja
| native_name_lang = ja
வரிசை 25: வரிசை 25:
| influences =
| influences =
| influenced =
| influenced =
| awards = [[Imperial Prize of the Japan Academy|Imperial Prize]] {{small|(1996)}}
[[Robert Koch Prize|Koch Prize]] {{small|(2012)}}
[[Order of Culture]] {{small|(2013)}}
[[Tang Prize]] {{small|(2014)}}
[[Kyoto Prize]] {{small|(2016)}}
[[Warren Alpert Foundation Prize|Alpert Prize]] {{small|(2017)}}
[[Nobel Prize in Physiology or Medicine]] {{small|(2018)}}
| awards = [[சப்பான் பேரரசப் பரிசு]] {{small|(1996)}}
[[கோஃகு பரிசு]] {{small|(2012)}}
[[Order of Culture]] {{small|(2013)}}
[[தாங்கு பரிசு]]{{small|(2014)}}
[[கியோட்டோ பரிசு]] {{small|(2016)}}
[[ஆலுப்பெர்ட்டு பரிசு]] {{small|(2017)}}
[[மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு]] {{small|(2018)}}
| signature_alt =
| signature_alt =
17:45, 1 அக்டோபர் 2018 இல் நிலவும் திருத்தம்
தசுக்கோ ஃகோஞ்சோ
(Tasuku Honjo)
தசுக்கோ ஃகோஞ்சோ
இயற்பெயர்本庶 佑
பிறப்புசனவரி 27, 1942 (1942-01-27) (அகவை 82)
கியோட்டொ, சப்பான்
தேசியம்சப்பானியர்
துறைமூலக்கூற்று நோய்த்தடுப்பியல்
பணியிடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கியோட்டோ பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்Yasutomi Nishizuka
Osamu Hayaishi
அறியப்படுவதுClass switch recombination
IL-4, IL-5, ACD
Cancer immunotherapy
PD-1
விருதுகள்சப்பான் பேரரசப் பரிசு (1996)
கோஃகு பரிசு (2012)
Order of Culture (2013)
தாங்கு பரிசு(2014)
கியோட்டோ பரிசு (2016)
ஆலுப்பெர்ட்டு பரிசு (2017)
மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2018)
தசுக்கோ ஃகோஞ்சோ (Tasuku Honjo) (本庶 佑 Honjo Tasuku?, பிறப்பு சனவரி 27, 1942 in கியோட்டோ) அவர்கள் உடலியங்கியலில் நோய்த்தடுப்பியல் துறையில் நன்கு அறியப்பட்ட சப்பானிய ஆய்வாளர். இவருக்கு 2018 ஆம் ஆண்டின் மருத்துவத்துக்கும் உடலியங்க்கியலுக்குமான நோபல் பரிசை சேம்சு ஆலிசன் என்னும் அமெரிக்கருடன் இணைந்து வழங்கியுள்ளார்கள்[1]. இவருடைய முக்கியமான கண்டுபிடிப்பானது உயிரணுவின் இறப்பை திட்டப்படி இறக்கச்செய்யும் புரதப்பொருளைக் கண்டறிந்ததாகும். இப்புரதத்தை "Programmed Cell Death Protein 1 (PD-1)" என்றழைக்கின்றார்கள்[2] உயிரணுகளிடையே குறிப்புகள் செலுத்தும் சிறு மூலக்கூற்று புரதங்களாகிய இண்டர்லூக்கின்-4, இண்டர்லூக்கின்-5 ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காகவும் இவர் புகழ் பெற்றுள்ளார்.[3]
2014 ஆம் ஆண்டு, இவரும் சேம்சு ஆலிசன் அவர்களும் சேர்ந்து உயிரிய மருந்தியல் துறைக்கான தாங்கு பரிசை (Tang Prize) வென்றனர்.[4].
வாழ்க்கை வரலாறு
தசுக்கோ ஃகோஞ்சோ அவர்கள் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் எம்.டி என்னும் மருத்துவப் பட்டத்தை 1966 இல் பெற்றார், பிறகு அங்கேயே மருத்துவ வேதியியலில் 1975 இல் யசுத்தோமி நிசிசுக்கா (Yasutomi Nishizuka) மற்றும் ஒசாமு ஃகயாயிசி (Osamu Hayaishi) ஆகியோர்களின் நெறியாள்கையில் முனைவர்ப்பட்டம் பெற்றார்[5]
1971 முதல் 1974 வரை இவர் வாசிங்டன் காரினிகிக் கழகத்தின் உயிரிக்கருவியல் (Embryology) துறையிலும் அமெரிக்காவின் தேசிய குழந்தை நலமும் மாந்த வளர்ச்சிக்குமான கழகத்திலும் வருகைச் சிறப்பாளராகவும இருந்தார். இதன் பின்னர் இவர் 1974 முதல் 1979 வரை தோக்கியோ பல்கலைக்கழகத்தில் மருத்துவத்துறையில் துணைப்பேராசிரியராக இருந்தார். 1979 முதல் 1984 வரை ஒசாகா பல்கலைக்கழகத்தின் மருத்துவக் களத்தில், மரபணுவியல் துறையில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் இருந்தார்.ref name="JBIO"/>.
1984 முதல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியரணியில் இருக்கின்றார். 2017 இல் இவர் கியோட்டோ பல்கலைக்கழகத்தின் முன்னேகிய படிப்புக்கான கழகத்தின் (Kyoto University Institute for Advanced Study (KUIAS)) சிறப்புப்பேராசிரியராகவும் துணை இயக்குநர்த்தலைவராகவும் இருந்து வருகின்றார்[6]
மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்
1. Hannah, Devlin. "James P Allison and Tasuku Honjo win Nobel prize for medicine". The Guardian. பார்க்கப்பட்ட நாள் 1 October 2018.
2. Ishida, Y; Agata, Y; Shibahara, K; Honjo, T (1992). "Induced expression of PD-1, a novel member of the immunoglobulin gene superfamily, upon programmed cell death". The EMBO Journal 11 (11): 3887–95. பப்மெட்:1396582.
3. Kumanogoh, A; Ogata, M (2010). "The study of cytokines by Japanese researchers: A historical perspective". International Immunology 22 (5): 341–5. doi:10.1093/intimm/dxq022. பப்மெட்:20338911.
4. "2014 Tang Prize in Biopharmaceutical Science". பார்க்கப்பட்ட நாள் 2016-06-18. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help); Unknown parameter |dead-url= ignored (help)
5. ""免疫のしくみに魅せられて-何ごとにも主体的に挑む". (சப்பானிய மொழி).
6. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; KP என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுக்கு_ஓஞ்சோ&oldid=2583511" இலிருந்து மீள்விக்கப்பட்டது