கொள்ளு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Photograph with low quality removed and added good quality photograph
வரிசை 2: வரிசை 2:
|name =கொள்ளு/காணம்
|name =கொள்ளு/காணம்
|image = Horse Gram BNC.jpg
|image = Horse Gram BNC.jpg
| image_caption =
|regnum = [[தாவரம்]]
|regnum = [[தாவரம்]]
|familia =ஃபேபேசியே
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_or|familia =ஃபேபேசியே
|genus = ''மேக்ரோடைலோமா''
|genus = ''மேக்ரோடைலோமா''
|species = '''''எம். யுனிஃபுளோரம்'''''
|species = '''''எம். யுனிஃபுளோரம்'''''
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|binomial = ''Macrotyloma uniflorum''
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|binomial_authority = (Lam.) Verdc.
|unranked_or|}}
|}}
'''கொள்ளு/கொள்''' (''Macrotyloma uniflorum'') என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். இதன் சிறப்பை '''இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு''' என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.
'''கொள்ளு/கொள்''' (''Macrotyloma uniflorum'') என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். இதன் சிறப்பை '''இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு''' என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.



10:11, 15 பெப்பிரவரி 2017 இல் நிலவும் திருத்தம்

கொள்ளு/காணம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
குடும்பம்:
ஃபேபேசியே
பேரினம்:
மேக்ரோடைலோமா
இனம்:
எம். யுனிஃபுளோரம்

கொள்ளு/கொள் (Macrotyloma uniflorum) என்பது ஒருவகை பயறு வகையாகும். இதனைத் தென் தமிழகத்தில் காணம் எனவும் விளிக்கின்றனர். இதற்கு வேறு பெயர்களாக முதிரை என அழைப்பதும் உண்டு. இது தென்னிந்திய உணவில் இடம்பெற்ற ஒரு பயறு ஆகும். இதில் சத்துப் பொருட்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தட்டையாக பழுப்பு மற்றும் மண்ணின் நிறத்திலும் காணப்படும் ஒரு வகைத் தானியமாகும். இதன் விளைச்சல் தென்னிந்தியாவில் கூடுதலாகும். இதன் சிறப்பை இளைத்தவனுக்குக் எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு என்னும் பழமொழியின் வாயிலாக நன்கு உணரலாம்.

இதற்கு ஆங்கிலத்தில் ஆர்ச் க்ராம் என விளிப்பர். அதற்குக் காரணம் இப்பயறு பண்டுக் காலத்தில் குதிரைக்கு தீவணமாகக் கொடுத்து வந்தனர். இதற்கு மலையாளத்தில் மூதிரா எனவும் தெலுங்கில் உலாவாலு என வேறுப் பெயர்கள் இட்டு கூப்பிடுகின்றனர். இதைத் தவிர்த்து இந்தியில் குல்தி, அரபியில் அபுல் குல்த், சமற்கிருதத்தில் குளதா களை, சீன மொழியில் பியான் டௌ என உலகும் முழுதும் அழைக்கின்றனர். பண்டைய மருத்துவமான சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் இவை மருந்தாகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது.

சிறப்புப் பண்புகள்

  • இதனை சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கும், மூலநோயிற்கும், இரத்தக்கட்டிற்கும் மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
  • இதில் இரும்பு, கால்சியம் (சுண்ணம்), மாலிப்டினம், பலபீனால்கள் உள்ளடக்கியுள்ளது. இவை தீங்கு விளைவிக்கும் ஆக்சிசனை தடுத்து நமது உடற்கலங்களுக்கு/உயிரணுக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது. இவை அத்தீங்கு ஆக்சிசனைத் தடுக்கும் முக்கியக் காரணிகளை அகத்தேக் கொண்டுள்ளதாக இயம்பப்படுகிறது.
  • இதற்கு உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து உடலை இறுக்கும் ஆற்றலுள்ளதாகவும் அறியப்படுகிறது. தொந்தி மற்றும் இதய நோயுள்ளவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
  • இதனை சளி மற்றும் கோழையால் அவதியுறுபவர்களுக்கு உணவாகக் கொடுப்பதன் மூலம், சளியை உடலில் இருந்து வெளியேற்ற உதவுகிறது.
  • கொள்ளை வேகவைத்து எடுத்த நீரை குடிப்பதன் மூலம் காய்ச்சல் மற்றும் சளியை கட்டுப்படுத்தப் பயன்படுத்தப் பட்டுவருகிறது.
  • பெண்களின் மாதவிடாய்க் கோளாறுகளுக்கு இது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • முளைக் கட்டியக் கொள்ளு/காணத்தில் உயிர்ச்சத்துப் பொருட்களாகிய உயிர்ச்சத்து ஏ, பி மற்றும் சி நிறைந்துக் காணப்படுகிறது. இதனுள் உடலுக்குத் தேவையானத் தனிமமாகிய இரும்பு மற்றும் பொட்டசியம் நிறைந்திருக்கின்றன எனவும் கூறப்படுகிறது [1].
  • இது தமிழர் உணவுகளில் அவியல், துவையல், இரசம், பொறியலாக இடம்பிடிக்கின்றன.

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொள்ளு&oldid=2187272" இலிருந்து மீள்விக்கப்பட்டது