செம்மறியாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: new:फइ
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: hif:Bherra
வரிசை 88: வரிசை 88:
[[he:כבש הבית]]
[[he:כבש הבית]]
[[hi:भेड़]]
[[hi:भेड़]]
[[hif:Bherra]]
[[hr:Domaća ovca]]
[[hr:Domaća ovca]]
[[ht:Mouton]]
[[ht:Mouton]]

21:07, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

வளர்ப்புச் செம்மறியாடு
இடாஹோவின் டூபியசுக்கு அண்மையில் காணப்படும் ஐக்கிய அமெரிக்கச் செம்மறியாடுகள் சோதனை நிலையம்.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
பேரினம்:
இனம்:
ஆ. ஏரீஸ்
இருசொற் பெயரீடு
ஆவிஸ் ஏரீஸ்
லின்னேயஸ், 1758

வளர்ப்புச் செம்மறியாடு (Sheep, Ovis aries) என்பது, நாலுகால், இரைமீட்கும், பாலூட்டியாகும். எல்லா இரைமீட்கும் விலங்குகளையும் போலவே, இதுவும் ஆர்ட்டியோடக்டிலா என்னும் இரட்டைக் குளம்புள்ள விலங்கின வரிசையைச் சேர்ந்தது. செம்மறியாடு என்பது தொடர்புடைய பல இனங்களைக் குறித்தாலும் அன்றாடப் பயன்பாட்டில் இது பெரும்பாலும் ஆவிஸ் ஏரீஸ் என்னும் இனத்தையே குறிக்கிறது. இதனை உள்ளடக்கிய பேரினத்தில் மிக அதிகமாகக் காணப்படுபவை வளர்ப்புச் செம்மறியாடுகளே. உலகில் இவற்றின் எண்ணிக்கை ஒரு பில்லியன் அளவுக்கு இருக்கலாம் என்கின்றனர். இவை ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் காணப்படுகின்ற மோஃப்லோன் (mouflon) எனப்படும் காட்டுச் செம்மறித் துணை இனத்திலிருந்து தோன்றியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

வேளாண்மைத் தேவைகளுக்காக மிகப் பழங்காலத்திலேயே வளர்ப்பு விலங்கு ஆக்கப்பட்ட இவ்வினம் கம்பளி, இறைச்சி, பால் என்பவற்றுக்காக வளர்க்கப்படுகின்றது. வேறெந்த விலங்கிலும் அதிகமாக செம்மறியாட்டுக் கம்பளியே பயன்படுகின்றது.

பயன்கள்

  • இறைச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது.
  • கொழுப்புத் தேவைகளுக்காகவும் பயன்படுகிறது.
  • மனிதன் தேவைக்கான கம்பளி ஆடைகளாகவும், கம்பளிப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படுகிறது.

வகைகள்

  • செம்மறியாடுகள் சில இறைச்சிக்காகவும், கொழுப்புக்காகவும் வளர்க்கப்படுகின்றன. சில கம்பளிக்காக வளர்க்கப்படுகின்றன.
  • இறைச்சிக்காகவும் கொழுப்புக்காக வளர்க்கப்படும் செம்மறியாடுகளில் வால்சதை ஆடுகள், ஹிஸ்ஸார் ஆடுகள் போன்றவைகளைக் குறிப்பிடலாம்.
  • கம்பளிக்காக வளர்க்கப்படும் ஆடுகளில் நுண்மயிருள்ள செம்மறி ஆடுகள், நடுத்தர மயிருள்ள செம்மறி ஆடுகள், பாதி முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள், முரட்டு மயிருள்ள செம்மறி ஆடுகள் என நான்கு முக்கிய வகைகள் உள்ளன.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்மறியாடு&oldid=1339562" இலிருந்து மீள்விக்கப்பட்டது