காப்பு எதிர் நஞ்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: nl:Anafylatoxine (deleted)
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: gl:Anafilotoxina
வரிசை 13: வரிசை 13:
[[de:Anaphylatoxine]]
[[de:Anaphylatoxine]]
[[en:Anaphylatoxin]]
[[en:Anaphylatoxin]]
[[gl:Anafilotoxina]]
[[id:Anafilatoksin]]
[[id:Anafilatoksin]]
[[ja:アナフィラトキシン]]
[[ja:アナフィラトキシン]]

10:43, 6 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

காப்பு எதிர் நஞ்சு-போன்ற திரளம்; பன்றி C5adesArg மூலக்கூற்றின் கட்டமைப்பு.[1]
காப்பு எதிர் நஞ்சு C5a - புரத முப்பரிமாண கட்டமைப்பு
காப்பு எதிர் நஞ்சு C5a - ஏற்பி

காப்பு எதிர் நஞ்சுகள் (Anaphylatoxins/anaphylotoxins) என்பவை நிரப்புப்புரதங்களின் முன்-புரதங்கள் நொதிகளால் துண்டாக்கப்பட்டு செயலாற்றும் நிலையை அடையும்போது உண்டாக்கப்படும் புரதத் துண்டுகளாகும் (C3a, C4a மற்றும் C5a)[2]. நிரப்புப்புரத பாகங்களான C3, C4 மற்றும் C5 ஆகிய பெரிய கிளைக்கோ புரதங்கள் நோய்எதிர்ப்புத்திறன் உருவாக்கத்திலும், ஓம்பு பாதுகாப்பிலும் (host defense) முக்கிய பங்காற்றுகின்றன.[3] இப்புரதங்கள், பல்வேறுவிதமான உயிரியல் பணிகளைக் கொண்டுள்ளன. மேலும், இவை குறிப்பிட்ட பகுதிகளில் நொதிகளால் பிளக்கப்பட்டு "a" மற்றும் "b" துண்டுகளாக்கப்படுகின்றன.[4] "a"-துண்டுகள் ஏறத்தாழ 76 அமினோ அமிலங்களைக் கொண்ட தனிப்பட்ட கட்டமைப்பு திரள்களாக உருவாகின்றன. இவை, நிரப்புபுரத மரபணுக்களின் ஒற்றை வெளியன்களால் (புரதக்குறியீடு செய்யும் மரபணுக்கோர்வை) குறிமுறை செய்யப்படுகின்றன. C3a, C4a மற்றும் C5a புரதத் துண்டுகளே காப்பு எதிர் நஞ்சுகள் என்றழைக்கப்படுகின்றன.[4][5]: இவை மென்தசை சுருக்கம், அடிநாட்டக்கலத்திலிருந்து திசுநீர் தேக்கி (histamine) வெளியீடு மற்றும் மிகு இரத்தநாள கசிமை ஆகியவற்றை விளைவிக்கின்றன.[5] மேலும் இவை வேதியீர்ப்பு, அழற்சி மற்றும் செல்நச்சிய உயிர்வளி மூலிகங்களை (radicals) செயலூக்குகின்றன.[5] இப்புரதங்கள் மிகு நீர்நாடும் திறனுள்ளவை. இதன் ஆல்ஃபா எழுசுருள் வடிவம் மூன்று இருசல்பைடு பிணைப்பினால் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது.[5]

அண்மையில், முடக்குவாதத்திற்கான தடுப்பு மருந்தினைக் கண்டறியும் ஆய்வுகளில் MBP-C5a மரபிழைச் சீரமைப்பு புரதத்தினால் உருவாகும் எதிர்ப்பான்கள் சுண்டெலிகளில் முடக்குவாத நோயினைத் தணிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.[6] தற்போது கட்டுப்படுத்த இயலாத சில பெரும் மனித நோய்களுக்கும், C5-C5a அச்சினை இலக்காகக் கொண்டு உருவாக்கப்படும் மருந்துகள், சிகிச்சை அளிக்க சாத்தியமளிக்கின்றன [7]

மேற்கோள்கள்

  1. Williamson MP, Madison VS (March 1990). "Three-dimensional structure of porcine C5adesArg from 1H nuclear magnetic resonance data". Biochemistry 29 (12): 2895–905. doi:10.1021/bi00464a002. பப்மெட்:2337573. 
  2. Hugli TE (1986). "Biochemistry and biology of anaphylatoxins". Complement 3 (3): 111–27. பப்மெட்:3542363. 
  3. Fritzinger DC, Petrella EC, Connelly MB, Bredehorst R, Vogel CW (1992). "Primary structure of cobra complement component C3". J. Immunol. 149 (11): 3554–3562. பப்மெட்:1431125. 
  4. 4.0 4.1 Rosa PA, Ogata RT, Zepf NE (1989). "Sequence of the gene for murine complement component C4". J. Biol. Chem. 264 (28): 16565–16572. பப்மெட்:2777798. 
  5. 5.0 5.1 5.2 5.3 Gennaro R, Simonic T, Negri A, Mottola C, Secchi C, Ronchi S, Romeo D (1986). "C5a fragment of bovine complement. Purification, bioassays, amino-acid sequence and other structural studies". Eur. J. Biochem. 155 (1): 77–86. doi:10.1111/j.1432-1033.1986.tb09460.x. பப்மெட்:3081348. 
  6. Nandakumar KS, Jansson A, Xu B, Rydell N, Ahooghalandari P, Hellman L, Blom AM, Holmdahl R. (2010). "IA recombinant vaccine effectively induces c5a-specific neutralizing antibodies and prevents arthritis.". PLoS One. 5 (10): e13511.. பப்மெட்:20975959. 
  7. Woodruff TM, Nandakumar KS, Tedesco F. (2011). "Inhibiting the C5-C5a receptor axis.". Mol. Immunol. 48 (14): 1631–1642. பப்மெட்:21549429. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பு_எதிர்_நஞ்சு&oldid=1315731" இலிருந்து மீள்விக்கப்பட்டது