இந்தியாவின் விடுதலை நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fr:Jour de l'Indépendance (Inde)
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: fa:روز استقلال (هند)
வரிசை 13: வரிசை 13:
[[de:Unabhängigkeitstag (Indien)]]
[[de:Unabhängigkeitstag (Indien)]]
[[en:Independence Day (India)]]
[[en:Independence Day (India)]]
[[fa:روز استقلال (هند)]]
[[fr:Jour de l'Indépendance (Inde)]]
[[fr:Jour de l'Indépendance (Inde)]]
[[gu:સ્વતંત્રતા દિવસ (ભારત)]]
[[gu:સ્વતંત્રતા દિવસ (ભારત)]]

17:46, 1 அக்டோபர் 2012 இல் நிலவும் திருத்தம்

கூடலூர் என்.எஸ்.கே.பி.பள்ளியில் இந்திய விடுதலை நாள் விழாவில் ஒரு மாணவி தன் தோழிக்கு இந்திய தேசியக் கொடியின் அடையாள அட்டையை இணைக்கிறார்.
இந்திய சுதந்திர தினம்

இந்திய சுதந்திர தினம் அல்லது இந்திய விடுதலை நாள் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ம் தேதி கொண்டாடப் படுகிறது. 1947 ஆகஸ்ட் 15 ல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்து தனி சுதந்திர நாடானாதை குறிக்கும் இந்த நாள் அரசு விடுமுறையாகும். இந்த நாளில் நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்படும்.

இந்த நாளில் இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி எற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அப்போது சுதந்திர போராட்ட தியாகிகள் நினைவுகூரப் பட்டு மரியாதை செலுத்தப்படுவர். பிரதமர் சென்ற ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோள்களையும் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார்.

ஒவ்வொரு மாநிலத் தலைநகரத்திலும் மாநில முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதுடன் நலத்திட்ட உதவிகளையும் வழங்குவர். இதுபோல் மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்களும், அரசு அலுவலகங்களில் அதன் உயரதிகாரிகளும், பள்ளி, கல்லூரிகளில் தலைமை ஆசிரியர்/முதல்வர் அல்லது சிறப்பு விருந்தினராக அழைக்கப் பெற்றவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரையாற்றுவர்.