உள்ளடக்கத்துக்குச் செல்

சிடைபையோபலேடினைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிடைபையோபலேடினைட்டு
Stibiopalladinite
சிடைபையோபலேடினைட்டு (உலோகத்தன்மை, மையம், கீழே)
பொதுவானாவை
வகைசல்பைடு கனிமம்
வேதி வாய்பாடுPd5Sb2
இனங்காணல்
நிறம்வெள்ளியை போன்ற வெண்மையும் சாம்பலும்
படிக அமைப்புஅறுகோணப் படிகத்திட்டம்
மோவின் அளவுகோல் வலிமை4 - 5
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்கருப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது

சிடைபையோபலேடினைட்டு (Stibiopalladinite) என்பது Pd5Sb2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். இக்கனிமத்தில் பலேடியம், ஆண்டிமனி போன்ற தனிமங்கள் காணப்படுகின்றன [1]. வெள்ளியைப் போன்ற வெண்மை நிறம் மற்றும் வெள்ளியைப் போன்ற சாம்பல் நிறங்களில் ஒளிபுகா கனிமமாக இது அறுகோண படிகத் திட்டத்தில் படிகமாகிறது [2].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் சிடைபையோபலேடினைட்டு கனிமத்தை Stpdn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

தென் ஆப்பிரிக்காவின் புசுவெல்டு தீப்பாறைத் தொகுதியில் இக்கனிமம் தோற்றம் பெற்றதாக 1929 ஆம் ஆண்டு முதன்முதலாக விவரிக்கப்பட்டது [4].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Handbook of Mineralogy - Stibiopalladinite" (PDF). Handbookofmineralogy.com. Archived from the original (PDF) on 2013-06-02. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  2. "Stibiopalladinite: Stibiopalladinite mineral information and data". Mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  4. "Stibiopalladinite Mineral Data". Webmineral.com. பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.

உசாத்துணை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிடைபையோபலேடினைட்டு&oldid=4092018" இலிருந்து மீள்விக்கப்பட்டது