சாங் லோ
சாங் லோ (Chang Lo) நடனம், நாகாலாந்தின் சாங் பழங்குடியினரால் நிகழ்த்தப்படுகிறது. எதிரிகளுக்கு எதிரான வெற்றியைக் கொண்டாடுவதற்காக அவர்கள் அதைச் செய்கிறார்கள். இது மூன்று நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவில், நாடகமும் நடத்தப்படுகிறது. [1]
சாங் லோ நடனத்தின் வரலாறு
[தொகு]சாங் லோ அல்லது சுவா லுவா நடனம் என்பது இந்தியாவின் ஒரு மாநிலமான நாகாலாந்தின் வடகிழக்கு பகுதியில் பிரபலமாக இருக்கும் நாட்டுப்புற நடனம் ஆகும். முந்தைய காலங்களில், போர்க்களத்தில் ஒரு போர்வீரன் தனது எதிரிகளை வென்றதை நினைவுகூரும் வகையில் இது நிகழ்த்தப்பட்டது. தற்போதைய சூழ்நிலையில், இது மாநிலத்தில் அறுவடை காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. சாங் லோ நடனம் குறிப்பாக 3 நாள் கொண்டாடப்படும் பொங்கலெம் திருவிழாவின் போது நிகழ்த்தப்படுகிறது, இது பழங்குடியினரில் அறுவடை விழாக்கள் தொடங்குவதற்கு முன்பு கொண்டாடப்படுகிறது. சாங் பழங்குடி இந்த கலை வடிவத்தில் நிபுணத்துவம் பெற்றது; எனவே இந்த பெயர் நடன வடிவத்திற்கு முறையாகக் கூறப்படுகிறது. [2]
சாங் லோ நடனத்தில் பயன்படுத்தப்படும் உடைகள்
[தொகு]இந்த நடன வடிவம் குறிப்பாக தனது எதிரியின் மீது ஒரு போர்வீரனின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் உருவாக்கப்பட்டதால், சாங் லோவின் ஆடை ஒரு போர்வீரனின் உடையை ஒத்திருக்கிறது. இந்த நடனம் ஆண் மற்றும் பெண் இருவராலும் நிகழ்த்தப்படுவதால், பயன்படுத்தப்படும் ஆடை பாலினத்திற்கு ஏற்ப மாறுபடும். எனவே ஆண்களுக்கான உடையில் பண்டைய நாகாலாந்து போர்வீரரின் அசல் கவசமும் அடங்கும். பெண் நடனக் கலைஞர்கள் வண்ணமயமான உடையை அணிகின்றனர். மேலும், விலங்குகளின் கொம்புகள் மற்றும் தந்தங்களினால் செய்யப்பட்ட அணிகலன்களை பயன்படுத்துகின்றனர். [3]
நடன பாணி
[தொகு]சாங் லோ ஒரு குழு நடனம் ஆகும். இதில் நாடகம் இயற்றப்படுவதும் அடங்கும். இந்த பழங்குடி நாட்டுப்புற நடனம் அதன் தனித்துவமான நடனத்தைக் கொண்டதாக உள்ளது. இந்த நடனம், ஆடுபவர்களின் கால்களின் அதிகபட்ச இயக்கங்களையும் உடலின் மேல் பகுதியின் குறைந்தபட்ச இயக்கத்தையும் கொண்டுள்ளது. ஆண் மற்றும் பெண் நடனக் கலைஞர்களை உள்ளடக்கிய கலைஞர்களின் குழு இசையுடன் சரியான ஒத்திசைவு இயக்கத்தை நிறைய கோஷங்கள் மற்றும் கைதட்டல்களுடன் செய்கிறது. இந்த நடனத்தில் இசைக்கருவி முரசு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த நடனத்தின் காணொளி காட்சிகள் யூடியூப்பில் காணக்கிடைக்கின்றன. [4]
தலைமுறை வழி
[தொகு]சாங் லோ கற்றுக்கொள்ள குறிப்பிட்ட பள்ளி அல்லது பயிற்சி மையம் இல்லை. நாகாலாந்தின் இந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தின் பயிற்சி ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு அனுப்பப்பட்டு பல நூற்றாண்டுகளாக இதுபோன்று நடந்து கொண்டிருக்கிறது. இது உண்மையில் ஒரு அற்புதமான நடன வடிவமாக உள்ளது.[5]
பிற திருவிழாக்கள்
[தொகு]முதன்மை கட்டுரை : ஹார்ன்பில் திருவிழா
ஹார்ன்பில் திருவிழா, இந்திய மாநிலமான நாகாலாந்தில் நடைபெறும் திருவிழாவாகும். இது ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் முதல் வாரத்தில் கொண்டாடப்படும்[6] நாகாலாந்தில் வாழும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோர் உழவுத் தொழிலை நம்பியுள்ளனர். எனவே, அவர்களின் திருவிழாக்களும் உழவுத் தொழிலை அடிப்படையானவையாக இருக்கின்றன. இந்த மக்கள் திருவிழாக்களில் கலந்துகொள்வதை புனிதமாக கருதுகின்றனர்.[7] பழங்குடியின மக்களின் ஒற்றுமையை பேணி காக்கவும், பண்பாட்டை போற்றவும் நாகாலாந்து அரசு தீர்மானித்தது. 2000ஆம் ஆண்டு முதல் இந்த திருவிழா நடத்தப்படுகிறது.[8]
பழங்குடியினர் பாரம்பரிய நாட்டுப்புறக் கதைகளில் இருவாய்ச்சி பறவைக்கு முக்கியத்துவம் உண்டு. அதன் காரணமாக, இந்த திருவிழாவுக்கு பறவையின் பெயர் முன்னிறுத்தப்படுகிறது. இத்திருவிழாவில், பாரம்பரிய கலை வேலைப்பாடுகளைக் கொண்ட ஓவியங்களும், சிலைகளும் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. பழங்குடியின மக்கள் தங்கள் நாட்டுப்புற பாடல்களை பாடியும், பாரம்பரிய நடனமாடியும், பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்கின்றனர்.[9]
குறிப்புகள்
[தொகு]- ↑ "Changlo-Sua Lua Dance". Indian Classical, Folk, & Tribal Dance. Ananta Hospitality. பார்க்கப்பட்ட நாள் 2012-11-09.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-03-02. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
- ↑ https://www.youtube.com/watch?v=oDqKdN76BhA
- ↑ https://www.gosahin.com/places-to-visit/chang-lo-dance/
- ↑ "Nagaland – Hiking and Hornbill Festival in India". AlienAdv Blog. Archived from the original on 2015-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.
- ↑ Hornbill Festival - Where the Action is... பரணிடப்பட்டது 2011-11-19 at the வந்தவழி இயந்திரம், EF News International. 16 November 2011.
- ↑ Hornbill Festival of Nagaland பரணிடப்பட்டது 2017-09-09 at the வந்தவழி இயந்திரம், India-north-east.com
- ↑ "Hornbill Festival 2015 - Hornbill Rock Contest". www.hornbillfestival.com. Archived from the original on 2015-12-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-12.