உள்ளடக்கத்துக்குச் செல்

சளி சுரப்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சளி சுரப்பி
Mucous gland
முயலின் இலை போன்ற நுண்காம்பு செங்குத்து தோற்றம், இலையகங்கள் குறுக்கே செல்கிறது. (கீழ் வலதுபுறத்தில் நீர்பிடிப்புச்சுரப்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது)
மனித கீழ்த்தாடைச்சுரப்பி. வலதுபுறத்தில் சளி பல்லெலும்புப் சுரப்பி, இடதுபுறத்தில் நீர்பிடிப்புச்சுரப்பி சீரஸ் நுண்ணறைகள்.
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்glandula mucosa
THTH {{{2}}}.html HH2.00.02.0.03036 .{{{2}}}.{{{3}}}
FMA62888
உடற்கூற்றியல்

சளி சுரப்பி (Mucous gland) என்பது மியூசிபரசு சுரப்பிகள் என்றும் அழைக்கப்படுகிறது. இது உடலின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன. மேலும் பொதுவாக உடற்கூராய்வின் போது சாயமேற்றல் தயாரிப்பில் பிற சுரப்பிகளை விடக் குறைவான அளவிலே சாயங்களை எடுக்கும் திறனுடையவை. பெரும்பாலானவை பல உயிரணுக்களைக் கொண்டவை; ஆனால் குடுவை வடிவ உயிரணுக்கள் ஒற்றை செல் சுரப்பிகள்.[1]

சளி உமிழ்நீர் சுரப்பிகள்

[தொகு]

வாய் குழி மற்றும் உதட்டுப் பகுதிகளில் காணப்படும் சளி உமிழ்நீர் சுரப்பிகள் கட்டமைப்பில் ஒத்தவையாக உள்ளன.

இவை குறிப்பாக கிண்ண உரு நுண் காம்பின் பின்பகுதியில் காணப்படுகின்றன. ஆனால் உச்சம் மற்றும் விளிம்பு பகுதிகளிலும் உள்ளன.

இந்த தொடர்பில் முன்புற நாக்குச் சுரப்பிகள் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இவை நாக்கின் உச்சியின் கீழ் மேற்பரப்பில், நுண்ணிழுமடியின் இருபுறமும் அமைந்துள்ளன. இங்கு இவை கூர்நாத்தசை மற்றும் தாழ்நிலை நீளமான தசைகளிலிருந்து பெறப்பட்ட தசை நார்களால் மூடப்பட்டிருக்கும். இவை கிளைக்கோபுரதங்கள், மியூசின் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன. இது தண்ணீரை உறிஞ்சி சளி எனப்படும் ஒட்டும் சுரப்பை உருவாக்குகிறது.

இவை 12 முதல் 25 வரை மி.மீ. நீளமானது மற்றும் சுமார் 8 மி.மீ. அகலமானது. இதன் உச்சியின் கீழ் மேற்பரப்பில் மூன்று அல்லது நான்கு குழாய்களால் திறக்கும்.

வெபரின் சுரப்பிகள் நாக்குடன் அமைந்துள்ள மியூசிபரஸ் சுரப்பிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

This article incorporates text in the public domain from page 1131 of the 20th edition of Gray's Anatomy (1918)

  1. An Illustrated Guide to Oral Histology. United Kingdom, Wiley, 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சளி_சுரப்பி&oldid=3623042" இலிருந்து மீள்விக்கப்பட்டது