சமற்கிருத ஆதிக்கம் (நூல்)
Appearance
சமற்கிருத ஆதிக்கம் என்னும் இந்த நூல் முதன் முதல் 1985 ஆம் ஆண்டில் திராவிடர் கழக (இயக்க)ப் பதிப்பாக வெளிவந்தது. இரண்டாம் பதிப்பு 2014 திசம்பரில் வெளிவந்தது.
நூலின் வரலாறு
[தொகு]பெரியார் திறந்த பல்கலைக் கழகத்தின் சார்பில் 1985 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 9, 10 தேதிகளில் சமற்கிருத மயமாக்கப்பட்டமை என்னும் பொருளில் நடைபெற்ற கருத்தரங்கில் அறிஞர்கள் படித்த 22 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாக உருப்பெற்றது.
கட்டுரைகளும் ஆக்கியோரும்
[தொகு]- பண்பாடு சமற்கிருதமயமாக்கப்படுதல்--முனைவர் க. த. திருநாவுக்கரசு
- நமது பண்பாடு சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.வை. சொக்கப்பா
- தமிழ் முப்பால் மரபும் வடமொழி நாற்பால் மரபும்--முனைவர் தி.முருகரத்தனம்
- தமிழர் திருவிழாக்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-திருக்கார்த்திகையும் தீபாவளியும்--முனைவர் தமிழண்ணல்
- சமற்கிருத மயமாக்கப்பட்ட தமிழிலக்கணம்--பெ.திருஞானசம்பந்தன்
- தமிழ்ச் சொற்கள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை-தமிழ் அரசு--முனைவர் தமிழண்ணல்
- கணக்கு வழக்கு எங்கே?--இராம.சுப்பிரமணியன்
- தமிழ்ச் சித்தர்கள் இலக்கியங்களில் வடமொழி ஆட்சி --முனைவர் இரா. மாணிக்கவாசகம்
- தமிழ்மொழியில் வடசொற்கள் புகுந்தமை --முனைவர் சி. பாலசுப்பிரமணியன்
- சமுதாய வாழ்வில் வடமொழி மேலாண்மை--முனைவர் பொற்கோ
- இசை, ஆடற்கலைகள் சமற்கிருத மயமாக்கப்பட்டமை--ப.தண்டபாணி
- இசையுலகில் வடமொழி ஆதிக்கம்--முனைவர் சேலம் எஸ் செயலட்சுமி
- சித்த மருத்துவத்தில் வடமொழிக் கலப்பு--முனைவர் ப.சிற்சபை
- சமயப் மெய்ப்பொருளியல்களில் சமற்கிருதம்--முனைவர் தெ. ஞானசுந்தரம்
- சைவ சமயமும் மெய்ப்பொருளியலும் சமற்கிருதமயமாக்கப்பட்டமை --எஸ்.கெங்காதரன்
- தமிழர் சமய நெறிகள் சமற்கிருதமயமாக்கப்பட்டமை--மதுரை குரு மகாசன்னிதானம்
- வேத மொழியும் பேத மொழியும்--கரூர் பி.ஆர்.குப்புசாமி
- சமுதாய வாழ்வும் சமற்கிருத மயமாக்கப்பட்ட கல்வி அறிவும் --கு. வெ. கி. ஆசான்
- சமுதாய வாழ்க்கை சமற்கிருதமயமாக்கப்பட்டமை--தி.இராமதாஸ்
- சங்க அரசியல் சமற்கிருதமயமாதல் --திருமதி மீனாட்சி முருகரத்தனம்
- தமிழக வரலாற்றில் ஆரியம் விளைத்த அழிவுகள் --பேராசிரியர் ந. க. மங்கள முருகேசன்
- நில உரிமைகளில் சமற்கிருத வழக்கு--முனைவர் அ. இராமசாமி
- தந்தை பெரியார் கருத்தரங்க தொடக்க உரை--முனைவர் வ. ஐ. சுப்பிரமணியம்
- தலைமை உரை--நீதியரசர் பி.வேணுகோபால்
- முனைவர் மா. நன்னன் அறிமுகவுரை
- மானமிகு கி. வீரமணி வரவேற்புரை
சான்று
[தொகு]- சமற்கிருத ஆதிக்கம், நூல்-திராவிடர் கழக (இயக்கம்) வெளியீடு, வேப்பேரி, சென்னை-600007
- சமற்கிருத ஆதிக்கம் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம், Online Public Access Catalog (OPAC), கன்னிமாரா பொது நூலகம்