உள்ளடக்கத்துக்குச் செல்

சபாட்டியரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சபாட்டியரைட்டு
Sabatierite
பொதுவானாவை
வகைசெலீனைடு கனிமம்
வேதி வாய்பாடுCu6TlSe4
இனங்காணல்
மோலார் நிறை695.45 கிராம்
படிக இயல்புதிரட்டுகள், நுண்ணிய படிகங்கள்
படிக அமைப்புநேர்சாய்சதுரம்
மோவின் அளவுகோல் வலிமை2.5
மிளிர்வுஉலோகத்தன்மை
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது
பலதிசை வண்ணப்படிகமைவெளிர் பழுப்பு நிறத்தில் இருந்து வெளிர் நீல நிற தனித்துவம்

சபாட்டியரைட்டு (Sabatierite) என்பது Cu6TlSe4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் சபாட்டியரைட்டை Sab[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. செக் குடியரசு நாட்டில் இக்கனிமம் கிடைக்கிறது. கனிமத்தில் Cu4TlSe3 என்ற சேர்மம் அதிக அளவில் ஒரு கூறாக இருக்க வாய்ப்புள்ளது வேதியியல் மற்றும் படிகவியல் ரீதியாக சபாட்டியரைட்டு படிகங்கள் நாற்கோணக படிகச்சமச்சீர் தன்மையைக் கொண்டுள்ளன.[2] 1923 ஆம் ஆண்டில் பிறந்த பிரெஞ்சு கனிமவியலாளர் செருமைன் சபாட்டியர் நினைவாக கனிமத்திற்கு சபாட்டியரைட்டு என்று பெயர் சூட்டப்பட்டது.[3][4][5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A. 
  2. R. A. Berger, Zeitschr. Kristall. 181 (1987) 241
  3. Mindat.org - Sabatierite
  4. Webmineral.com - Sabatierite
  5. "Handbook of Mineralogy - Sabatierite" (PDF). Archived from the original (PDF) on 2012-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாட்டியரைட்டு&oldid=4128104" இலிருந்து மீள்விக்கப்பட்டது