குரூக்கிசைட்டு
குரூக்கிசைட்டு Crookesite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | செலீனைடு கனிமம் |
வேதி வாய்பாடு | Cu7(Tl,Ag)Se4 |
இனங்காணல் | |
நிறம் | ஈயச் சாம்பல் |
படிக இயல்பு | பரவவிடப்பட்ட தழும்பு மற்றும் கிளை நரம்பு போன்று நுண்ணியதாகப் பிரிக்கப்பட்டுள்ளது. |
படிக அமைப்பு | நான்முகம் - சர்வசம நான்முகம் |
பிளப்பு | செங்கோணத்தில் இரண்டு பிளவுகள், நன்று. |
முறிவு | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5–3 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது. |
ஒப்படர்த்தி | 6.90 |
மேற்கோள்கள் | [1][2] |
குரூக்கிசைட்டு (Crookesite) என்பது Cu7(Tl,Ag)Se4 அல்லது (Cu,Tl,Ag)2Se என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் [3]அறியப்படும் ஒரு கனிமம் ஆகும். செலீனைடு வகை கனிமமான இது செப்பு மற்றும் செலீனியம் தனிமங்களுடன் மாறுபடும் தாலியம் மற்றும் வெள்ளி தனிமங்களால் ஆக்கப்பட்டுள்ளது.
பண்புகள்
[தொகு]நீர்வெப்ப பாய்மங்களில் இருந்து வீழ்படிவாதல் முறையில் இக்கனிமம் உருவாகிறது. தாலியம் 16.3 சதவீதம், தாமிரம் 47.3 சதவீதம், வெள்ளி 2.9 சதவீதம் மற்றும் 33.6 சதவீதம் செலீனியம் என பகுதிப்பொருட்கள் இக்கனிமத்தில் சேர்ந்துள்ளன.[1]
நான்முகப் படிக அமைப்பில் படிகமாகியுள்ள குரூக்கிசைட்டு ஒளிபுகாத் தன்மையுடன் நீலநிறச் சாம்பல் முதல் இளஞ்சிவப்பு நீங்கிய பழுப்பு நிறமாக காணப்படுகிறது. 2.5 முதல் 3 என்ற மோவின் அளவுகோலில் 2.5 என்ற கடினத்தன்மை அளவும் 6.9 என்ற நீர் ஒப்படர்த்தியும் கொண்டுள்ளது.
பெயர் மற்றும் கண்டுபிடிப்பு
[தொகு]1866 ஆம் ஆண்டு சுவீடனைச் சேர்ந்த சிக்ரிகெரம் என்பவர் இக்கனிமத்தைக் கண்டறிந்தார். தாலியம் தனிமத்தைக் கண்டறிந்த வில்லியம் குரூக்சு (1832-1919) என்பவரின் பெயர் இக்கனிமத்திற்குச் சூட்டப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- Berger, Rolf A.; Sobott, Robert J. (1987). "Characterization of TlCu7S4, a crookesite analogue". Monatshefte für Chemie Chemical Monthly 118: 967. doi:10.1007/BF00815324.
- Berger, R..A. (1987). "Crookesite and sabatierite in a new light A crystallographer's cornrnent". Zeitschrift für Kristallographie 181: 241–249. doi:10.1524/zkri.1987.181.1-4.241. Bibcode: 1987ZK....181..241B. http://rruff.geo.arizona.edu/doclib/zk/vol181/ZK181_241.pdf.