சபாட்டியரைட்டு
தோற்றம்
| சபாட்டியரைட்டு Sabatierite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | செலீனைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | Cu6TlSe4 |
| இனங்காணல் | |
| மோலார் நிறை | 695.45 கிராம் |
| படிக இயல்பு | திரட்டுகள், நுண்ணிய படிகங்கள் |
| படிக அமைப்பு | நேர்சாய்சதுரம் |
| மோவின் அளவுகோல் வலிமை | 2.5 |
| மிளிர்வு | உலோகத்தன்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
| பலதிசை வண்ணப்படிகமை | வெளிர் பழுப்பு நிறத்தில் இருந்து வெளிர் நீல நிற தனித்துவம் |
சபாட்டியரைட்டு (Sabatierite) என்பது Cu6TlSe4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். பன்னாட்டு கனிமவியலாளர் சங்கம் சபாட்டியரைட்டை Sab[1] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது. செக் குடியரசு நாட்டில் இக்கனிமம் கிடைக்கிறது. கனிமத்தில் Cu4TlSe3 என்ற சேர்மம் அதிக அளவில் ஒரு கூறாக இருக்க வாய்ப்புள்ளது வேதியியல் மற்றும் படிகவியல் ரீதியாக சபாட்டியரைட்டு படிகங்கள் நாற்கோணக படிகச்சமச்சீர் தன்மையைக் கொண்டுள்ளன.[2] 1923 ஆம் ஆண்டில் பிறந்த பிரெஞ்சு கனிமவியலாளர் செருமைன் சபாட்டியர் நினைவாக கனிமத்திற்கு சபாட்டியரைட்டு என்று பெயர் சூட்டப்பட்டது.[3][4][5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. https://www.cambridge.org/core/journals/mineralogical-magazine/article/imacnmnc-approved-mineral-symbols/62311F45ED37831D78603C6E6B25EE0A.
- ↑ R. A. Berger, Zeitschr. Kristall. 181 (1987) 241
- ↑ Mindat.org - Sabatierite
- ↑ Webmineral.com - Sabatierite
- ↑ "Handbook of Mineralogy - Sabatierite" (PDF). Archived from the original (PDF) on 2012-09-24. Retrieved 2023-09-15.