கதவு சந்தானம்
கதவு சந்தானம் | |
---|---|
பிறப்பு | கே. ஆர். சந்தானகிருஷ்ணன் |
கதவு சந்தானம் என்றழைக்கப்படும் கே. ஆர். சந்தானகிருஷ்ணன் (K. R. Santhanakrishnan) ஒரு தமிழக ஓவியர் ஆவார். கதவுகளை கருப்பொருளாக கொண்டு பலவிதமான கதவு ஓவியங்களை வரைந்துள்ளார். அதனால் கதவு சந்தானம் என அறியப்படுகிறார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]சந்தானக்கிருஷ்ணன் கும்பகோணம் ஓவியக் கல்லூரியில் இளங்கலை பயின்றார். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் (மாஸ்டர் ஆஃப் பைன் ஆர்ட்ஸ்) பெற்றார். கதவு சந்தானம் என்ற பெயருக்கான காரணம் கதவுகள் குறித்து அவர் ஓவியம் வரைவது தான்.[1][2]
ஓவியர் சந்தானம் தன்னுடைய வாழ்க்கையில் வைத்திருக்கும் இலட்சியமே கதவுகளைக் குறித்த ஓவியங்களை மட்டும் வரைவது என்பது தான். இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும், ஸ்பெயின், பார்சிலோனா போன்ற வெளிநாடுகளிலும் கண்காட்சிகள் நடத்தியிருக்கும் சந்தானம் சில விருதுகளையும் பெற்றிருக்கிறார். [3]
ஓவியம்
[தொகு]இவரது ஓவியங்கள் தமிழின மரபையும் அதில் ஒளிந்துள்ள அர்த்தங்களையும் எடுத்துரைக்கும், இந்த ஓவியம்.
விருதுகள்
[தொகு]2000ஆம் ஆண்டில் தமிழ் நாடு ஓவிய நுண்கலைக் குழு மற்றும் லலித் கலா அகாடமியின் மாநில விருதை பெற்றிருக்கிறார்.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-04-01. பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
- ↑ http://www.absolutearts.com/portfolios/s/sanhema/artist_statement.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ http://xavi.wordpress.com/2008/01/21/door/