உள்ளடக்கத்துக்குச் செல்

சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி (எசுப்பானியம்: Frente Sandinista de Liberación Nacional, ஆங்கில மொழி: Sandinista National Liberation Front) நிக்கராகுவா நாட்டிலுள்ள ஒரு மக்களாட்சிசார் நிகருடைமைக் கொள்கையுள்ள அரசியல் கட்சி ஆகும்.[1][2] 19 ஜூலை 1961 ஆம் ஆண்டு கார்லோஸ் ஃபொன்சேக்கா, சில்வியோ மயோர்கா, தொமாஸ் போர்கே முதலானோரைக் கொண்ட பல்கலைக்கழக மாணவர் குழு தேசிய விடுதலை முன்னணி என்ற அமைப்பைத் தொடங்கியது.[3] இரண்டாண்டுகளுக்குப் பின் 1930 களில் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்த அகுஸ்டோ செஸார் சாண்டினோவின் பெயர் இணைக்கப்பட்டு சாண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி உருவானது.

2001 அதிபர் தேர்தலில் இந்த கட்சியைச் சேர்ந்த டானியல் ஒர்ட்டேகா 876927 வாக்குகளைப் பெற்றார் (43%). 2001 நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்களில் அக்கட்சி 915417 வாக்குகளைப் (42.1%, 41 இடங்கள்) பெற்றது. 2011 ஆம் ஆண்டின் தேர்தலில் 60.85% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் டானியல் ஒர்ட்டேகா நிக்கராகுவா நாட்டின் அதிபரானார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Richard Collin; Pamela L. Martin (2012). An Introduction to World Politics: Conflict and Consensus on a Small Planet. Rowman & Littlefield. pp. 218–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4422-1803-1. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013.
  2. "Nicaragua Twenty-five Years Later". Solidarity-us.org. 1979-07-19. பார்க்கப்பட்ட நாள் 2013-04-18.
  3. The FSLN official website may once have named the following as founders: Santos López (former Sandino fighter), Carlos Fonseca, Silvio Mayorga, Tomás Borge, Germán Pomares Ordonez, Jorge Navarro, Julio Buitrago, Faustino Ruiz, Rigoberto Cruz and José Benito Escobar Pérez. The original citation, dated March 30, 2009, was to http://www.fsln-nicaragua.com "History of Nicaragua's FSLN." The page no longer lists the names shown above, and appears to be a commercial site, not the FSLN's site (November 2009).

வெளி இணைப்புகள்

[தொகு]