கௌதமி நாயர்
கௌதமி நாயர் | |
---|---|
கௌதமி நாயர், 2019 | |
பிறப்பு | ஆலப்புழா மாவட்டம், கேரளம், இந்தியா |
கல்வி | அரசு மகளிர் கல்லூரி, திருவனந்தபுரம் (MSc psychology) |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 2012– தற்போது |
கௌதமி நாயர் (Gauthami Nair, மலையாளம்: ഗൗതമി നായർ) என்பவர் ஒரு இந்திய நடிகையும் மலையாள திரைப்பட இயக்குநரும் ஆவார். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான செகண்ட் சோ என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.[1][2][3]
கல்வி
[தொகு]திரைப்படத் தொழிலைத் தொடர இவர் தனது படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டார். ஆனால் 2012 இல், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இணைந்து படிப்பினை முடித்தார். அக்கல்லூரியில் முதுநிலைப் படிப்பைத் தொடர்ந்தார், பல்கலைக்கழகத் தேர்வுகளில் இரண்டாம் இடத்துடன் பட்டம் பெற்றார்.
திருமணம்
[தொகு]இவர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் ஜோடியாக செகண்ட் சோ என்ற படத்தில் நடித்தார். இது தான் துல்கர் சல்மான், கவுதமி நாயர் ஆகியோருக்கு முதல் படம் ஆகும்.
இந்த படத்தில் நடிக்கும்போதே கவுதமிக்கும், ஸ்ரீநாத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டு, கவுதமியின் சொந்த ஊரான ஆழப்புழாவில் அவர்களின் திருமணம் ஏப்ரல் 2017 இல் நடந்தது.[4]
திரைப்படங்கள்
[தொகு]நடிகர்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | Ref. |
---|---|---|---|
2012 | செகன்ட் சோ | கீதாஞ்சலி ஜனந்திரன் | |
டைமெண்ட் நெக்லஸ் | லட்சுமி | [5] | |
சேப்டர்ஸ் | பிரியா | ||
2014 | கூத்தாரா | ரோசனி | [6] |
2016 | கேம்பஸ் டைரி | கிருஷ்ணபிரியா | |
2022 | மேரி ஆஜோ சுனோ | ரோடியோ ஜாக்கி பாலி | [7] |
2023 | 2018 | அனுபமா | [8] |
இயக்குநர்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | ரோல் | Ref. / குறிப்பு |
---|---|---|---|
2023 | விருத்தம் | இயக்குநர் | முதல் இயக்கம்[9] |
ஆதாரங்கள்
[தொகு]- ↑ "Second Show". Sify. Archived from the original on 19 May 2015. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
- ↑ "Diamond Necklace". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movie-reviews/diamond-necklace/movie-review/13012359.cms.
- ↑ "Review: Don't miss Diamond Necklace". Rediff. பார்க்கப்பட்ட நாள் 31 October 2019.
- ↑ "தன்னை ஹீரோயினாக்கிய இயக்குனரையே ரகசிய திருமணம் செய்த நடிகை". FilmiBeat.
- ↑ "List of Winners at the 60th Idea Filmfare Awards (South)".
- ↑ "Gauthami Nair has a good comic timing! - Times of India". 19 June 2014. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/gauthami-nair-has-a-good-comic-timing/articleshow/36761524.cms.
- ↑ "For the love of radio". The New Indian Express. 11 May 2022. https://www.newindianexpress.com/amp/story/entertainment/malayalam/2022/may/11/for-the-love-of-radio-2452032.html.
- ↑ "Jude Anthony Joseph Unveils Title of his Upcoming Film Based on 2018 Kerala Floods". News18 (in ஆங்கிலம்). 2022-11-05. பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
- ↑ "Gauthami Nair: Vruttham is not a women-centric film, but it will have a female perspective". The Times of India. 31 December 2018. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/gauthami-nair-vruttham-is-not-a-women-centric-film-but-it-will-have-a-female-perspective/articleshow/67284966.cms.