கோவிந்தன் லட்சுமணன்
Appearance
தனிநபர் தகவல் | ||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியா | |||||||||||||||||||
பிறப்பு | அக்டோபர் 18, 1990 புதுக்கோட்டை | |||||||||||||||||||
வசிப்பிடம் | புதுக்கோட்டை தமிழ்நாடு, இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | ||||||||||||||||||||
நாடு | இந்தியா | |||||||||||||||||||
விளையாட்டு | ஓட்டப்பந்தயம், தடகளம் | |||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 5000 மீட்டர் 10,000மீட்டர் 3000மீட்டர் | |||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | ||||||||||||||||||||
மிகவுயர் உலக தரவரிசை | ஆண்களுக்கான 5000மீட்டர், 10000 மீட்டர் ஓட்டப் போட்டிகளில் தங்கம் | |||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
|
கோவிந்தன் லட்சுமணன் (Govindan Lakshmanan) இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார்.[1] இவர் பெரும்பாலும் 5000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர்களுக்கு மேல் போட்டியிடுகிறார்.[2] ஆனால் அரை மாரத்தானையும் போட்டியாக ஓடியுள்ளார்.[3][4] தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]தனது ஆறு வயதில் தந்தையை ஒரு விபத்தில் இழந்த இவர், பக்கத்து வீட்டுக்காரரான எஸ். உலோகநான் என்பவரால் தத்தெடுக்கப்பட்டார்.[2] இவரது தாயார் ஜெயலட்சுமி சிறு விவசாயி. உலோகநாதனின் மகள் சூரியாவுடன் இவரது 16 வது வயதில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள கவிநாடு கிராமத்தில் உள்ள இளைஞர் விளையாட்டுக் கழகத்தில் நீண்ட தூர ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.[5]
சாதனை
[தொகு]- சீனாவின் ஊகானில் 2015இல் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் 13:36.62. நேரத்தில் ஓடி வெண்கலம் வென்றார்.
- சீனாவின் ஊகானில் 2015இல் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 10000மீட்டர் ஓட்டப் போட்டியில் 29:42.81 நேரத்தில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
- இந்தியாவின் புவனேசுரத்தில் 2017இல் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் 14:54.48, நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.
- துருக்மெனிஸ்தான் நாட்டில் 2017 நடைபெற்ற 5வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 3,000 மீ ஓட்டப்பந்தயத்தில் 08:02.30 நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
- ↑ 2.0 2.1 "Asian Athletic Championships: 5,000 m gold medallist G Lakshmanan once practised barefoot". The Times of India. 7 July 2017. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/asian-athletic-championships-5000-m-gold-medallist-g-lakshmanan-once-practised-barefoot/articleshow/59491279.cms. பார்த்த நாள்: 7 July 2017.
- ↑ "G Lakshmanan, Monika Athare Best Indians At Delhi Half Marathon". NDTV. 20 November 2016. http://www.ndtv.com/delhi-news/g-lakshmanan-monika-athare-best-indians-at-delhi-half-marathon-1627755. பார்த்த நாள்: 7 July 2017.
- ↑ "Army runners Neeraj Pal, G Lakshmanan, Kavita Raut of ONGC set new marathon course marks". Daily News and Analysis. 21 December 2014. http://www.dnaindia.com/sport/report-army-runners-neeraj-pal-g-lakshmanan-kavita-raut-of-ongc-set-new-marathon-course-marks-2045947. பார்த்த நாள்: 7 July 2017.
- ↑ Selvaraj, Jonathan (2 June 2017). "Siblings Lakshmanan and Suriya united by love for running". ESPN. http://www.espn.in/athletics/story/_/id/19513256/siblings-lakshmanan-suriya-united-love-running. பார்த்த நாள்: 7 July 2017.
- http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/asian-athletic-championships-5000-m-gold-medallist-g-lakshmanan-once-practised-barefoot/articleshow/59491279.cms
- http://www.ndtv.com/delhi-news/g-lakshmanan-monika-athare-best-indians-at-delhi-half-marathon-1627755
- http://www.dnaindia.com/sport/report-army-runners-neeraj-pal-g-lakshmanan-kavita-raut-of-ongc-set-new-marathon-course-marks-2045947
- http://www.thehindu.com/sport/other-sports/asian-athletics-championships-poovamma-joseph-win-silver-medals/article7282726.ece
- http://www.dnaindia.com/sport/report-vikas-gowda-lalita-babbar-win-gold-at-asian-athletics-championships-in-china-2093152
- https://www.iaaf.org/news/report/hadadi-wins-fifth-asian-discus-title-bhubanes
- http://www.vikatan.com/news/sports/94791-5000-m-gold-medallist-g-lakshmanan-once-practised-barefoot.html
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐ.ஏ.ஏ.எஃபில் இடம்பெறும் கோவிந்தன் லட்சுமணன்-இன் குறிப்புப் பக்கம்