உள்ளடக்கத்துக்குச் செல்

கோவிந்தன் லட்சுமணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவிந்தன் லட்சுமணன்
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியா
பிறப்புஅக்டோபர் 18, 1990 (1990-10-18) (அகவை 33)
புதுக்கோட்டை
வசிப்பிடம்புதுக்கோட்டை தமிழ்நாடு, இந்தியா
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுஓட்டப்பந்தயம், தடகளம்
நிகழ்வு(கள்)5000 மீட்டர்
10,000மீட்டர்
3000மீட்டர்
சாதனைகளும் விருதுகளும்
மிகவுயர் உலக தரவரிசைஆண்களுக்கான 5000மீட்டர்,
10000 மீட்டர்
ஓட்டப் போட்டிகளில் தங்கம்
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் ஓட்டப்பந்தயம்
நாடு  இந்தியா
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள்
துர்க்மெனிஸ்தான்
ஆண்களுக்கான 3000மீட்டர்
தங்கம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2017 ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள்
017 புவனேசுவரம்
ஆண்களுக்கான 5000மீட்டர்
தங்கம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள்
2015 ஊகான், சீனா
ஆண்களுக்கான 10000மீட்டர்
வெள்ளி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015 ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகள்
2015 ஊகான், சீனா
ஆண்களுக்கான 5000மீட்டர்
வெண்கலம்

கோவிந்தன் லட்சுமணன் (Govindan Lakshmanan) இந்தியாவின் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார்.[1] இவர் பெரும்பாலும் 5000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர்களுக்கு மேல் போட்டியிடுகிறார்.[2] ஆனால் அரை மாரத்தானையும் போட்டியாக ஓடியுள்ளார்.[3][4] தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

சொந்த வாழ்க்கை

[தொகு]

தனது ஆறு வயதில் தந்தையை ஒரு விபத்தில் இழந்த இவர், பக்கத்து வீட்டுக்காரரான எஸ். உலோகநான் என்பவரால் தத்தெடுக்கப்பட்டார்.[2] இவரது தாயார் ஜெயலட்சுமி சிறு விவசாயி. உலோகநாதனின் மகள் சூரியாவுடன் இவரது 16 வது வயதில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை நகருக்கு அருகிலுள்ள கவிநாடு கிராமத்தில் உள்ள இளைஞர் விளையாட்டுக் கழகத்தில் நீண்ட தூர ஓட்டப் பயிற்சியைத் தொடங்கினார்.[5]

சாதனை

[தொகு]
 • சீனாவின் ஊகானில் 2015இல் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கு தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000 மீட்டர் ஓட்டப் போட்டியில் 13:36.62. நேரத்தில் ஓடி வெண்கலம் வென்றார்.
 • சீனாவின் ஊகானில் 2015இல் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 10000மீட்டர் ஓட்டப் போட்டியில் 29:42.81 நேரத்தில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
 • இந்தியாவின் புவனேசுரத்தில் 2017இல் நடைபெற்ற ஆசிய தடகள விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப் போட்டியில் 14:54.48, நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.
 • துருக்மெனிஸ்தான் நாட்டில் 2017 நடைபெற்ற 5வது ஆசிய உள்ளரங்கு விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாக கலந்து கொண்டு ஆண்களுக்கான 3,000 மீ ஓட்டப்பந்தயத்தில் 08:02.30 நேரத்தில் ஓடி தங்கம் வென்றார்.

மேற்கோள்கள்

[தொகு]
 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-08-30. பார்க்கப்பட்ட நாள் 2022-09-18.
 2. 2.0 2.1 "Asian Athletic Championships: 5,000 m gold medallist G Lakshmanan once practised barefoot". The Times of India. 7 July 2017. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/asian-athletic-championships-5000-m-gold-medallist-g-lakshmanan-once-practised-barefoot/articleshow/59491279.cms. பார்த்த நாள்: 7 July 2017. 
 3. "G Lakshmanan, Monika Athare Best Indians At Delhi Half Marathon". NDTV. 20 November 2016. http://www.ndtv.com/delhi-news/g-lakshmanan-monika-athare-best-indians-at-delhi-half-marathon-1627755. பார்த்த நாள்: 7 July 2017. 
 4. "Army runners Neeraj Pal, G Lakshmanan, Kavita Raut of ONGC set new marathon course marks". Daily News and Analysis. 21 December 2014. http://www.dnaindia.com/sport/report-army-runners-neeraj-pal-g-lakshmanan-kavita-raut-of-ongc-set-new-marathon-course-marks-2045947. பார்த்த நாள்: 7 July 2017. 
 5. Selvaraj, Jonathan (2 June 2017). "Siblings Lakshmanan and Suriya united by love for running". ESPN. http://www.espn.in/athletics/story/_/id/19513256/siblings-lakshmanan-suriya-united-love-running. பார்த்த நாள்: 7 July 2017. 
 1. http://timesofindia.indiatimes.com/sports/more-sports/athletics/asian-athletic-championships-5000-m-gold-medallist-g-lakshmanan-once-practised-barefoot/articleshow/59491279.cms
 2. http://www.ndtv.com/delhi-news/g-lakshmanan-monika-athare-best-indians-at-delhi-half-marathon-1627755
 3. http://www.dnaindia.com/sport/report-army-runners-neeraj-pal-g-lakshmanan-kavita-raut-of-ongc-set-new-marathon-course-marks-2045947
 4. http://www.thehindu.com/sport/other-sports/asian-athletics-championships-poovamma-joseph-win-silver-medals/article7282726.ece
 5. http://www.dnaindia.com/sport/report-vikas-gowda-lalita-babbar-win-gold-at-asian-athletics-championships-in-china-2093152
 6. https://www.iaaf.org/news/report/hadadi-wins-fifth-asian-discus-title-bhubanes
 7. http://www.vikatan.com/news/sports/94791-5000-m-gold-medallist-g-lakshmanan-once-practised-barefoot.html

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவிந்தன்_லட்சுமணன்&oldid=4008974" இலிருந்து மீள்விக்கப்பட்டது