கோவா, தாமன் மற்றும் தியூ
Appearance
கோவா, தாமன் மற்றும் தியூ Goa, Damão e Diu | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1961–1987 | |||||||||||
நிலை | ஒன்றியப் பகுதிகள் | ||||||||||
தலைநகரம் | பஞ்சிம் | ||||||||||
பேசப்படும் மொழிகள் | Portuguese, Konkani, Marathi, Gujarati | ||||||||||
Chief Ministers | |||||||||||
• 1963-66 (first) | Dayanand Bandodkar | ||||||||||
• 1985-87 (last) | Pratapsingh Rane | ||||||||||
Governors | |||||||||||
• 1961-62 (first) | Maj Gen K. P. Candeth (Military Governor) | ||||||||||
• 1984-87 (last) | Gopal Singh | ||||||||||
வரலாறு | |||||||||||
19 திசம்பர் 1961 | |||||||||||
• Statehood for Goa | 30 மே 1987 | ||||||||||
நாணயம் | இந்திய ரூபாய் | ||||||||||
|
கோவா, தமன் மற்றும் தியூ (Goa, Daman and Diu) ஆகியவை திசம்பர் 19, 1961 முதல் மே 30, 1987 வரை இந்தியாவின் ஒரு ஒன்றியப் பகுதியாக இருந்தன.
இந்த ஒன்றியப் பகுதியானது, தற்போதைய கோவா மாநிலத்தையும், குஜராத் கடற்கரையில் உள்ள தாமன் மற்றும் தியூவின் இரண்டு சிறிய கடலோர பகுதிகளையும் உள்ளடக்கியது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலியுடன் இந்த ஒன்றியப் பகுதி, போர்த்துகீசிய இந்தியாவை உள்ளடக்கியது. 1961இல் கோவா படையெடுப்புக்கு பின்னர், இந்த பகுதி இந்தியாவில் இணைக்கப்பட்டது.
மாவட்டங்கள்
[தொகு]இந்த ஒன்றியப் பகுதியில் கோவா, தமன் மற்றும் தியூ ஆகிய மூன்று மாவட்டங்கள் இருந்தது. 1987 ஆம் ஆண்டில் கோவாவுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது, மேலும் தாமன் மற்றும் தியூ ஒரு தனி ஒன்றியப் பகுதியாக மாற்றப்பட்டது.[1]