குனூ
குனு பிரகடனம் ரிச்சர்ட் ஸ்டால்மனால் எழுதப்பட்டு மார்ச் 1985ல் டாக்டர் டாப்ஸ் மென்பொருள் கருவிகள் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.[1] இது , குனு திட்டத்தின் இலக்குகளை வரையறுக்க , விளக்க , மற்றும் அதில் பங்குபெற்று ஆதரவு தர வேண்டி வெளியிடப்பட்டது . கட்டற்ற மென்பொருள் இயக்கத்தின் மிகவும் மதிக்கப்படும் அடிப்படை தத்துவ ஆதாரமாக கருத படுகிறது.முழு உரை Emacs போன்ற குனு மென்பொருளில் சேர்க்கப்பட்டுள்ளது, மற்றும் இணையத்தில் இது கிடைக்கும்.[2]
குனூ (GNU) என்பது கட்டற்ற மென்பொருட்களால் அமைந்த ஓர் இயங்குதளமாகும். இவ்வியங்குதளமானது, குனூ ஹேர்ட் கரு, libraries, கருவிகள், compilers, செயலிகள் போன்றவற்றை கொண்டிருக்கிறது.
இப்பெயரின் அர்த்தம் Gnu is Not Unix என்பதாகும். இவ்வியங்குதளம் யுனிக்ஸ் இனை பெருமளவு ஒத்திருப்பதாலும், ஆனால் இதன் ஆணைமூலம் யுனிக்சினுடையதல்ல என்பதாலும் இப்பெயர் தெரிவு செய்யப்பட்டது
இயங்குளத்தொகுதியின் அடிப்படை பாகங்களாக அமைவன பின்வருமாறு,
- GNU Compiler Collection (GCC)
- GNU binutils
- bash முனையம்
- GNU C library
- அடிப்படை கருவிகள்
குனூ தன்னுடைய வரைகலை பயனர் இடைமுகப்பு, எழுத்து உள்ளீடு போன்றவற்றின் அடிப்படையாக பிற செயற்றிட்டங்களின் தயாரிப்புகளான Xorg, TeX போன்றவற்றை பயன்படுத்துகிறது.
1983 இல் அறிவிக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட குனூ இயங்குதளம் இன்னமும் வெளியிடப்படவில்லை. குனூ இயங்குதளத்தின் உத்தியோகபூர்வ கருவான குனூ ஹேர்ட் (GNU HURD) இன்னமும் முழுமையாக்க உருவாக்கப்படவில்லை. பெரும்பாலான குனூ பயனர்கள் குனூ ஹேர்ட் இற்கு பதிலாக இன்னொரு செயற்றிட்டத்தின் தயாரிப்பான லினக்ஸ் கரு வினை பயன்படுத்துகின்றனர். Xorg, TeX போன்ற மூன்றாந்தரப்பு பொதிகள் உத்தியோகபூர்வமாக குனூ இயங்குதளத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தபோதும், மற்றுமொரு மூன்றாந்தரப்பு பொதியான லினக்ஸ் கரு உத்தியோகபூர்வமாக உள்ளடக்கப்படவில்லை.
லினக்ஸ் கருவினை உள்ளடக்கிய குனூவின் பதிப்புகள் லினக்ஸ் என்றே அழைக்கப்படும் மரபும் தோன்றிவிட்டது. குனூ திட்டமானது இப்பதிப்புக்களை குனூ/லினக்ஸ் என்று அழைக்குமாறு மக்களை கோருகிறது.
ஏராளமான குனூ மென்பொருட்கள் வின்டோஸ், சொலாரிஸ், மக்கின்டோஷ், பீ எஸ் டீ போன்ற இயங்குதளங்களில் இயங்கச்செய்யப்பட்டுள்ளன.
குனூ பொதுமக்கள் உரிமம், GNU Lesser General Public License, குனூ கட்டற்ற ஆவண உரிமம் போன்ற குனூ இயங்குதளத்திற்கென உருவாக்கப்பட்டவையே. இவ்வுரிமங்கள் இன்று பல்வேறு துறைகளில், வெவ்வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகின்றன
சுருக்கம்
[தொகு]குனு பிரகடனம் , GNU - குனு யுனிக்ஸல்ல , திட்டத்தின் நோக்கதை கோடிட்டு தொடங்குகிறது. அப்போதைய குனு உள்ளடக்கங்களை எழுதிய பின்னர் , அவை விவரித்து , விளக்கப்பட்டுள்ளன.மேலும் ரிச்சர்ட் ஸ்டால்மேன் அவர்கள் இந்த திட்டத்தை முடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விவரிக்கிறார் . அவரது விளக்கம் யூனிக்சு ஒரு தனியுரிம மென்பொருளாக பரிணாமம் பெற்றதை அடிப்படையாக கொண்டது.
சான்றுகள்
[தொகு]- ↑ ரிச்சர்ட் ஸ்டால்மன் (March 1985). "Dr. Dobb's Journal". Dr. Dobb's Journal 10 (3): 30. http://www.math.utah.edu/ftp/pub/tex/bib/toc/dr-dobbs-1980.html#10(3):March:1985. பார்த்த நாள்: 2013-08-13.
- ↑ Stallman, Richard (March 1985). "The GNU Manifesto – GNU Project – Free Software Foundation (FSF) - தமிழில் ஆமாச்சு". Gnu.org. Archived from the original on 2013-08-11. பார்க்கப்பட்ட நாள் 2013-08-13.