உள்ளடக்கத்துக்குச் செல்

குண்டாங்கல் (கரூர் மாவட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குண்டாங்கல் பாறை
சமணச் சிற்பம்
புனே சமண சமய சங்கத்தாரால் வைக்கப்ட்ட தூண்

குண்டாங்கல் (Kundangal) என்பது இந்தியாவின் தமிழ் நாட்டிலுள்ள கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம் அய்யர்மலை அருகே உள்ள சத்தியமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய பாறாங்கல் ஆகும். சுண்டக்காய் அமைப்பில் உள்ளதால் சுண்டக்காய் பாறை என்ற பெயரிலும் இந்தப் பாறை அழைக்கப்படுகிறது. ஒரு சிறு குன்றின் முகட்டின் மீது, ஒரு முட்டை வடிவில் இந்த குண்டாங்கல் பாறை அமைந்துள்ளது. ஏறத்தாழ 30 அடி உயரமுடைய இந்தப் பாறையின், ஒரு சிறிய பகுதி மட்டுமே தாங்கு பாறையின் மேல் அழுந்தி நிற்கும் காட்சி, நம்மை அதிசயிக்க வைக்கிறது.[1]

குண்டாங்கல் பாறை மிகவும் பழங்காலத்தைச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது. இப்பாறையில் சமணச் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளாது. இங்கு மதுரையைச் சார்ந்த சமணர்கள் வாழ்ந்திருக்கலாம் என நம்புகிறார்கள்.[2]தொல்லியல் துறையும், புனேயைச் சேர்ந்த சைன சங்கமும் ஆய்வு செய்துள்ளன. பழைய வரலாற்று நினைவுச் சின்னங்களின் எச்சமாக பாறை பாதுகாக்கப்பட்டு வருகிறது.[3]குளித்தலையிலிருந்து மணப்பாறை செல்லும் பாதையில் மூன்று கல் தொலைவில் உள்ளது.

நாசர் இயக்கி நடித்த 'அவதாரம்'என்ற படத்தின் ஒரு காட்சி இங்கே படமாக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "சுண்டக்கா மலை சுற்றுலாத் தலமாகுமா?". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2013/sep/22/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4-749329.html. பார்த்த நாள்: 7 September 2022. 
  2. "கரூர் புகழிமலையில் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்... கிமு 1ம் நூற்றாண்டிலேயே பள்ளிக்கூடம் நடத்திய சமணர்கள்". www.dinakaran.com. Archived from the original on 2022-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-09-07.
  3. "சிறுகுன்றின் மேல் நிற்கும் வரலாற்று அதிசயம்... சுண்டக்கா பாறையை மீட்டெடுக்கக் கோரிக்கை!". ஆனந்த விகடன். https://www.vikatan.com/government-and-politics/archaeology/requests-to-preserve-kundankal-jain-heritage-centre. பார்த்த நாள்: 7 September 2022.