குட்டே கோல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குட்டே கோல் ( Kutte Kol) என்பது இந்தியாவின் ஜம்மு காஷ்மீரின் சிறிநகர் நகரத்தின் வழியாக செல்லும் ஒரு கால்வாய் ஆகும். இடைக்கால காஷ்மீரின் ஆட்சியாளரான கோத ராணி, ஆரம்பத்தில் ஜீலத்தில் ஏற்படும் வெள்ளத்தை ஒழுங்குபடுத்துவதற்காக இதை கட்டியதாக நம்பப்படுகிறது.[1] பின்னர் இது உணவு தானியங்களை நகரத்திற்கு கொண்டு செல்ல வழியாகவும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இந்த கால்வாய் பாரிய அளவில் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. சிறீநகர் நகராட்சி நிர்வாகம் கால்வாயை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.

சொற்பிறப்பியல்[தொகு]

கோத ராணி என்பவரின் பெயரால் இது அழைக்கப்படுவதாக நம்பப்பட்டாலும், இந்த பெயர் 'குசிப்ட் குல்யா' ( ஜீலத்தின் மற்றொரு பெயர்) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது ' நீரோடை ' என்று பொருள்படும். [2] [3]

சான்றுகள்[தொகு]

  1. "Queens, poets, academics, mystics: A calendar celebrates 12 inspirational women of Kashmir".
  2. K.N. Dhar. Glimpses of Kashmiri Culture கூகுள் புத்தகங்களில்
  3. "Vitasta". பார்க்கப்பட்ட நாள் 19 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குட்டே_கோல்&oldid=3395864" இலிருந்து மீள்விக்கப்பட்டது