உள்ளடக்கத்துக்குச் செல்

காளி (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளி
இயக்கம்கிருத்திகா உதயநிதி
தயாரிப்புபாத்திமா விஜய் ஆண்டனி
இசைவிஜய் ஆண்டனி
நடிப்புவிஜய் ஆண்டனி
அஞ்சலி
சுனைனா
ஒளிப்பதிவுரிச்சர்டு ம நாதன்
படத்தொகுப்புலாரன்சு கிசோர்
கலையகம்விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேசன்
வெளியீடுமே 18, 2018 (2018-05-18)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காளி (Kaali) என்பது 2018 ஆண்டைய தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்க, ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் உருவான தமிழ்த்திரைப்படம் ஆகும். படத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா ஆகியோர் முதன்மைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ரிச்சர்டு ம நாதனின் ஒளிப்பதிவிலும், விஜய் ஆண்டனியின் இசையிலும், லாரன்சு கிசோரின் படத்தொகுப்பிலும் வெளிவந்தது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2017 இல் தொடங்கியது.[1]

நடிப்பு

[தொகு]

படப்பணிகள்

[தொகு]

கிருத்திகா உதயநிதி 2013இல் இயக்கிய வணக்கம் சென்னை திரைப்படத்திற்குப் பிறகு இத்திரைப்படத்தினை இயக்குவதாக அறிவித்தார்.[2] மார்ச் 2017 இல் இரண்டு மாதங்களுக்குப்பிறகு விஜய் ஆண்டனி இத்திரைப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும், இசையமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார்; இப்படத்தினை ஒரு குடும்பப்படம் என இப்படத்தின் இயக்குநர் கிருத்திகா உதயநிதி அறிவித்தார்.[3][4]அஞ்சலி, சுனைனா, அம்ரிதா, சில்பா மஞ்சுநாத் ஆகிய நான்கு நடிகைகள் இப்படத்தில் நடிக்க உள்ளனர்.

இசை

[தொகு]

இத்திரைப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்தார். பாடல்களை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Vijay Antony bags a project originally planned with Vijay". 7 March 2017.
  2. "Kiruthiga Udhayanidhi Stalin on her next with Vijay Antony". 26 January 2017.
  3. "Vijay Antony confirms 'Kaali' with Kiruthiga Udhayanidhi". Archived from the original on 2017-04-01. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
  4. "A Rajini title for Kiruthiga, Vijay Antony's film - Times of India".

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளி_(2018_திரைப்படம்)&oldid=4127062" இலிருந்து மீள்விக்கப்பட்டது